Blog

அகம்பாவம் என்பது என்ன?

~ ALP ஜோதிட புரிதல்.

வணக்கம். 

நான் சாந்தகுமார் ALP ஜோதிடர்  சென்னையில் இருந்து. 

இன்னைக்கு அகம்பாவம் அப்படிங்கிற ஒரு வார்த்தையை பின்புலமா வச்சுக்கிட்டு ஒரு சின்ன நிகழ்வு பேசுவோம். அகம்பாவம் அப்படிங்கறது நம்ம நார்மலா புரிஞ்சிக்கிறது வேற ஆனா உண்மையிலேயே அதற்கு அர்த்தங்கள் வேற வேற இருக்கு. அது வேற கோணத்துல பார்க்க போறோம். 

ஒருத்தர் நம்மகிட்ட பேசும்போது கொஞ்சம் திமிரா பேசினா அது அகம்பாவத்தோடு பேசுறாங்க அப்படின்னு சொல்றது தான் நாம ஒரு இயல்பா நடைமுறையில் இருக்கிற இயல்பு. ஆனா நான் தான் எல்லாம் நடத்துறேன். அப்படின்னு நான் என்ன பத்தி நானே நினைத்துக் கொள்வது தான் அகம்பாவம். அது நல்லது என்ன பத்தி நினைச்சாலும் அது அகம்பாவம். கெட்டதா என்ன பத்தி நானே தாழ்வா நினைச்சுக்கிட்டாலும் அதுவும் அகம்பாவம். என்னங்க இப்படி சொல்றீங்க. 

அகம் / பாவம் :

அகம்னா உள்ளேன்னு அர்த்தம். பாவம் என்றால் நடிப்பு அப்படின்னு அர்த்தம். நான் அப்படி உள்ள என்ன நானே நினைச்சுக்கிறேன் அப்படிங்கறதுதான். இப்போ இது உள்ள இருக்கிற நினைவு தானே வெளியே நடக்கிறது இல்லையா. நம்ம உள்ள நினைக்கிறதுனால தான் வெளியில நடந்துக்கிறோம் அப்படின்னு சொல்ல வரேன் அப்படித்தான் அதனுடைய அர்த்தம். வேற நேரத்துல வெளிய காட்டிக்க மாட்டோம். ஆனால் உள்ளுக்குள்ள நம்புவோம் நாம தான் எல்லாத்தையும் நடத்திக்கிட்டு இருக்கோம் அப்படிங்கற மாதிரி. 

இப்போ ஒரு உதாரணம் சொல்லி அதை புரிய வைக்க முயற்சி பண்றேன். ராமர் வாலிய வந்து மறைந்திருந்து தாக்கினார். அப்படிங்கிற தகவல் எல்லாருக்கும் தெரியும். ராமாயணம் படிச்சு இருப்பீங்கன்னு நம்புறேன். இவரை நேரடியா தாக்க கூடாது அப்படிங்கிறதுக்காக எட்டு மரங்களை கடந்து அதுக்கப்புறம் நிக்கிற வாலிய அந்த அம்பு போய் தாக்கணும். இதுதான் அந்த கதையினுடைய அம்சம். நான் வந்து அம்பு. ராமர் தான் என்னை எய்பவர். ராமருடைய அம்புரா துணியில 1000 அம்புகள் இருக்கு. எத்தனையோ அம்புகள் இருக்கு. கணக்குல அடங்காத அம்புகள் இருக்கு. 

எப்போ என்ன அம்பு நானு என்னை தேர்ந்தெடுத்தாரோ அப்பவே நான் ஜெயிச்சுட்டேன். ஏன்னா என்னை தேர்ந்தெடுத்தது யாரு? ராமர். கரெக்டா அவருடைய அந்த செயல் அப்பவே ஜெயிச்சிரும். இது முதல்ல தெரியணும்.

வித்தியாசம் இருக்கு :

இது ஏதோ நான் கூரா இருக்க போய் தான் நான் இந்த இலக்க போய் அடைகிறேன் அப்படிங்கிற நினைப்பு தான் இங்க பிரச்சனை. இதுக்கு வித்தியாசம் இருக்கு. கொஞ்சம் ஆழ்ந்து திரும்பத் திரும்ப யோசிச்சு பாருங்க. 

இந்த அம்பு கொஞ்சம் புத்திசாலித்தனமா நினைக்கிறதா நினைச்சுகிட்டு. இந்த ராமர் விட்ட மாதிரி நான் போக கூடாது. இந்த எட்டு மரத்தை கொஞ்சம் சிக்ஸக்கா போயி இலக்க போய் அடிச்சிடுறேன் அப்படின்னு நினைக்குமா? நினைக்காது. இல்ல கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை இருக்கிற அம்பு நான் கூர் சரியா இல்ல. எனக்கு வந்து இந்த மூன்று மரம் தாண்டி நாலாவது மரம் தாண்டும் போது மழுங்கிப்போன கூறு ஸ்டக்கா நின்னுடுமா அப்படின்னு யோசிக்குமா? யோசிக்காது. 

இல்ல இந்த ராமர் விடுற வேகம் சரியா இருக்குமா? போதுமான அளவு வேகத்தில் போகலேன்னா எங்கேயாவது பாதையில் நின்னுடுவேனா? அப்படின்னு இலக்க பத்தி கேள்வி கேட்குமா? கேட்காது. இதெல்லாம் யாருடைய வேலை ராமருடைய வேலை. 

ராமர் தேர்ந்தெடுத்துட்டார் அப்படின்னாலே அவருக்கு தெரியும். எது கூரான அம்பு. இந்த வேலைக்கு எது பொருந்தும் எந்த தூரத்தில் அடிக்கணும். எவ்வளவு வேகத்தில் அது கடக்கணும். எவ்வளவு தூரத்தில் கூரா இருக்கணும். அப்படிங்கிற நிகழ்வு எல்லாம் ராமருடைய வேலை. என்னுடைய வேலை இல்லை. அப்போ இலக்குன்னு ஒன்னு கொடுத்தாச்சு. 

என்னுடைய இலக்கு வாழ்க்கையினுடைய இலக்கு :

என்னுடைய இலக்கு வாழ்க்கையினுடைய இலக்கு இது. என்னோட பயணம் இது. அப்படின்னு தெளிவு ஆயிடுச்சுனா,விட்ட மாதிரி போயிட்டே இருக்கணும். அதுல வர்ற அனுபவங்கள் ராமருக்கு சமர்ப்பணம் பண்ணிட்டு போனீங்கன்னா எனக்கும் அந்த செயலுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. 

இந்த பல்பு நினைச்சுக்கிறது நானே தான் எரிகிறேன். அதனாலதான் பிரகாசமா இருக்குன்னு. இது எவ்வளவு பெரிய கற்பனை. இந்த கரண்ட் என்ற இறைசக்தி பல்பு குள்ள போகலன்னா பல்பு எரியாது. அதே இறைசக்தி ஃபேன் உள்ள போனா ஒரு ஃபேனும் சுத்துது. இப்ப ஃபேன் தானாதான் நான் தான் இந்த மனுஷனுக்கு காத்து கொடுக்கிறேன் அப்படின்னு அகம்பாவத்தோட இருக்கிறதா கற்பனை பண்ணிக்கலாமா? அந்த மாதிரி தான் பல செயல்கள் எல்லாம் நான் தான் பண்றேன் நான்தான் பண்றேன்னு நினைச்சுக்குறோம்.

நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போது நாம சரியா செயல்படுறதும் மற்ற விஷயங்கள் கடவுள்கிட்ட விடுவதும்.

எது விடணும்?

எது என் பொறுப்பு? 

புரிஞ்சுக்கறதுக்கு தான் ஜோதிடமே தேவைப்படுது. 

வாங்க ALP ஜோதிடம் படிங்க. உங்க வாழ்க்கைய உங்கள் பொறுப்பில் என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கோங்க.

நன்றி. 

வீடியோ லிங்க் : 

https://youtu.be/1dTzx1bfJrwsi=M706SSrKVu3q30Z1


About author

ALP Astrology

Admin=> Have all rights




Scroll to Top