
அனைவருக்கும் வணக்கம்.
என் பெயர் உமாவெங்கட். நான் அட்சய லக்ன பத்ததி ஜோதிடர். எல்லாருக்குமே ஒரு கேள்வி இருக்கும் அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தில் திருமணத்த வச்சு பார்க்க முடியுமா அப்படிங்கற கேள்வி உங்களுக்கும் வரலாம். கண்டிப்பாக பார்க்க முடியும்.
உங்களுடைய பிறந்த லக்னம் அப்படிங்கறது கும்ப லக்னம் உதாரணமாக வச்சிக்கிறேன். எனக்கு கும்ப லக்னமாக இருந்தது. என்னுடைய வயது வந்து 25 லிருந்து 30 குள்ள இருக்கு. திருமணத்திற்கு எல்லாருமே அந்த காலகட்டத்தில் முயற்சி பண்ணுவாங்க. சிலருக்கு இந்த காலகட்டத்தில திருமணம் நடக்கல அப்படிங்கறது சொல்லுவாங்க. ஏன் நடக்கலைன்னு பாத்தீங்கன்னா உங்களுக்கு அங்கு லக்னம் வளர்ந்த லக்னம்
அட்சய லக்னத்தில உங்களுக்கு என்ன நட்சத்திரப் புள்ளி போகுது அந்த அதிபதி எங்க இருக்காங்க. உங்க திருமணத்திற்கு இன்றைய உங்கள் வயதுக்கு ஏற்ற லக்னம் அப்படிங்கறது என்ன அதற்கு ஏழாம் பாவகாதிபதி எங்க இருக்காங்க பார்த்தாலே ரொம்ப அழகா தெள்ளத்தெளிவாக சொல்ல முடியும்.
அந்த ஏழாம் பாவக அதிபதி உங்கள் ஜாதகத்திற்கு அனுகூலமான உள்ள இடங்களில் இருந்தாங்கன்னா திருமணம் அப்படிங்கறது உங்களுக்கு ரொம்ப எளிமையா சீக்கிரமாக நடக்கும்.
சிலருக்கு உதாரணமாக சொல்ல போனோம்னா பிறந்த லக்னம் கும்ப லக்னம். இப்ப அவங்களுக்கு அட்சய லக்னம் அப்படிங்கறது மேஷ லக்னமாக இருக்கும்.
இப்ப, பரணி நட்சத்திரம் ஒன்றாம் பாதம் அட்சய நட்சத்திரப் புள்ளி அப்படிங்கறது இருக்கும். அப்ப இந்த கால கட்டத்துல திருமணத்திற்கு வாய்ப்பு இருக்குதானா கண்டிப்பாக இருக்குது. ஏற்கனவே பார்த்த மனதிற்குப்பிடித்த திருமணம் அப்படிங்கறது அவங்களுக்கு நடக்கும்.
இல்ல அந்த நட்சத்திரப்புள்ளி சொல்லக்கூடிய கிரகம் சுக்கிர பகவான். அந்த லக்னத்திற்கு ஏழாம் அதிபதி அவர்தான். அவர் இந்த லக்னத்திற்கு ஆறாம் இடத்துலையோ பத்தாம் இடத்திலையோ இந்த ஜாதகருக்கு அழுத்தம் தரக்கூடிய இடத்தில் இருந்தாங்க அப்படின்னா அந்த திருமணம் அப்படிங்கறது தாமதம் ஆகும்.
சரி. இந்த திருமண தாமதம் எப்படி நிறைவு செய்வது?
எப்படி அதை நிறைவு பண்ணுவது. ஏன்னா பத்து வருஷம் இயங்கக்கூடியது இந்த லக்னம் தான். அந்த 10 வருஷமே திருமணம் ஆகாமல் இருக்க முடியுமா? அப்படிங்கற ஒரு கேள்வி இருக்கும். பிரச்சனைக்குரிய இடங்களாக இருக்கும்.
உதாரணம் சொல்லணும்னா, இந்த பொண்ணு நல்ல நிலையில படிச்சிருக்காங்க. வரக்கூடிய கணவர் எப்படி இருந்தாங்கன்னா இவங்களுடைய திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். நீங்க பாக்குறது ஒரு சாதாரண வரனாக இருக்கும். பெற்றோர்கள் நன்றாக தெரியும். நம்ம பொண்ணுக்கு டாக்டர் மாப்பிள்ளை வேண்டாம். வக்கீல் மாப்பிள்ளை வேண்டாம். சாதாரண எதோ படிச்சவங்க ஆபீஸ்ல வேலை பார்க்கிறவங்க போதும் நினைப்பாங்க.
உங்க ஜாதகத்தில் உங்க பொண்ணோட ஜாதகத்துலையோ பையனோட ஜாதகத்துலையோ இந்த அமைப்பு இருந்தது அப்படின்னா கண்டிப்பாக உங்களுக்கு வரக்கூடிய மணமகன் அந்த வீட்டிற்கு வரக்கூடிய மருமகன் சொல்லக்கூடிய ஜாதகம் எப்படி இருக்கும் அப்படின்னா ஒரு லா LAW படிச்சவங்க, ஒரு டாக்டர் படிச்சவங்க, பிரச்சனைக்குரிய வேலை பாக்குறவங்க, ஆடிட்டிங் இருக்கிறவங்க, கோடிங் செக்ஷன்ல இருக்குறவங்க அந்த மாதிரி வேலையில் இருக்கிற பையனா பாருங்க. உங்களுக்கு ஆல்ரெடி அந்த ஜாதகம் வந்து இருக்கும்
அட்சய லக்னம் பரணி நட்சத்திரம் ஒன்றாம் பாதம் ஒரு ஜாதகருக்கு திருமணத்திற்கு உண்டான காலமாக இருந்தது. உங்களுக்கு ஆல்ரெடி இந்த மாதிரி வரன் வந்திருக்கும் தைரியமா எடுத்து பார்க்கலாம். அந்த வரன்ல ஒரு வரன் அப்படிங்கறது நீங்க பார்க்கலாம். கண்டிப்பாக அவங்களுக்கு அமையும். இது வந்து நம்மளே நம்மளுடைய திருமணத்தை வேண்டாம் சொல்லக்கூடிய ஒரு அமைப்பு. இந்த வரன் வேண்டாம் நம்மளே ஒதுக்கி வைக்க கூடிய அமைப்பு இந்த ஜாதகருக்கு கண்டிப்பாக உண்டு.
அதற்கப்புறம் அமைப்பு இருக்குதான்னு கேட்டீங்கன்னா இருக்குது. இந்த பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதம் போகும் போது நல்ல ஒரு திருமணத்திற்கு உண்டான வாய்ப்பு இவங்களுக்கு இருக்கும். அப்ப எடுத்து வச்ச ஜாதகங்கள்ல வேண்டான்னு விளக்கப்பட்ட ஜாதகங்களை அந்த மாதிரி வரன் அமைப்பு அப்படிங்கிறது இருக்கும். அதை எடுத்து செலக்சன் பண்ணி பாருங்க ரொம்ப அருமையா திருமணம் அப்படிங்கறது நடக்கும்.
இது யாரால் தடுக்கப்படுகிறது அப்படின்னு பாத்தீங்கன்னா தாயாரால். ஏன்னா அம்மா வந்து இந்த பொண்ணுக்கு இந்த மாதிரி சரியாகாது அப்படின்ற தன்மையை அவங்களுக்குள்ளயே ரெடி பண்ணி இருப்பாங்க. இல்லைன்னா அந்த பொண்ணு மனதுக்குப்பிடித்த திருமணம் அப்படின்னு ஒரு அமைப்பு இருக்கும். அதை மறைத்துக் கொண்டு இல்லைனா அது வேண்டாம் என்று சொல்லாமல் இருந்துட்டு வர வரன்களை வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுவாங்க.
ஒருமுறை அவர்களிடம் கேட்டுவிட்டு பரணி நட்சத்திரம் ஒன்றாம் பாதம் அட்சய லக்கனமாக செல்லும் நண்பர்கள் உங்க மகனிடமும், மகளிடமும் ஒரு முறை கேட்டுட்டு வரன் தேட ஆரம்பிங்க.
அதே மாதிரி பரணி நட்சத்திரம் நான்காம் பாதம் இது போகும் போதும் கண்டிப்பாக இதே மாதிரி ஒரு அமைப்பு அப்படிங்கிறது அவங்க ஜாதகத்துல இருக்கும். நீங்க பாத்தீங்கன்னா தெரியும். அவங்க கிட்ட பேசி பாருங்க. நாங்க நிறைய ஜாதகங்கள் அட்சய லக்ன பத்ததில பார்த்திருக்கோம். இதே மாதிரி அமைப்பை இல்லைன்னு சொன்னவங்க ஆமா என் மகள் சொல்றாங்க என் பையன் சொல்றாங்க அப்படிங்கற அமைப்பு வந்து திருமணங்கள் மிக விரைவில் நிறைவேறி இருக்கு.
அப்ப அவர்களிடம் ஒரு முறை பேசிவிட்டு திருமணத்தை முடிவு செய்வது அப்படின்றது நல்லா இருக்கும். சரிங்க எதுவுமே இல்லைறாங்க. என் பொண்ணு எதுவுமே சொல்லல. என் பையன் எதுவுமே சொல்லல. அப்போ எப்படி இந்த திருமணம் நடக்கும்னு கேட்டீங்கன்னா கோயிலுக்கு போயிட்டு வாங்க
எந்த கோயிலுக்கு திருவிடைமருதூர். தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கிற திருவிடைமருதூர் கோயிலுக்கு போயிட்டு வாங்க. உங்களுக்கு திருமண தடை என்னவாக இருந்தாலும் சரி. உங்களுடைய ஏழாம் அதிபதினு சொல்லக்கூடிய கிரகம் எந்த இடத்தில் இருந்தாலும் சரி. அங்க போயிட்டு சுவாமிக்கு ஒரு மாலை வாங்கி போடுங்க. ரெண்டு தீபம் அப்படிங்கிறது ஏத்துங்க. திருமண தடையை உடைத்து அடுத்து வரக்கூடிய காலங்கள் இவங்களுக்கு மிக சிறந்த வரனாக அமையும் அப்படிங்கறது சொல்லிக்கிறேன்.
நாம பார்த்தோம் இந்த பரணி நட்சத்திரம் நான்காம் பாதம் ஒருத்தவங்களுக்கு திருமண வாய்ப்பு ஒன்று கொடுக்கும் சொன்னோம். பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதமும் திருமணத்திற்கு உண்டான வாய்ப்பு இருக்கும்
அதுக்கப்புறம் இந்த கிருத்திகை நட்சத்திரம் ஒன்றாம் பாதம் அப்படிங்கறது அட்சய லக்னத்தில மேஷ லக்னத்தில இயங்கும். அதற்கு திருமண வாய்ப்புங்கிறது கிடையாது.
இப்ப நீங்க கேட்கலாம் ரெண்டு வருஷமா நான் பாக்குறேன். எனக்கு பையனே அமையல. பாத்துட்டு இருக்கோம் வரன் அமையலன்னு. உங்க ஜாதகத்தை அட்சய லக்ன பத்ததி சாப்ட்வேர்ல என்டர் பண்ணி பாருங்க. இரண்டு வருடமாக அந்த திருமண வாய்ப்பு இல்ல அப்படின்னு ஒரு கேள்வி வந்ததுனா உங்களுக்கு என்ன லக்னம் அட்சய லக்னம் அப்படிங்கறது கார்த்திகை நட்சத்திரம் ஒன்றாம் பாதம் முடிந்து லக்னம் மாற்றம் அடைந்து, கார்த்திகை நட்சத்திரம் இரண்டாம் பாதமாக இருக்கும்.
அப்பவுமே திருமண வாய்ப்புங்கிறது தானாகவே தட்டி போகும். அந்த காலகட்டத்தில் ஒரு முயற்சிகள் மட்டும் தான் நடக்கும். திருமணம் சார்ந்த முயற்சிகள் மட்டும்தான் அந்த காலகட்டத்தில் நடக்கும். அப்ப திருமணம் அங்க தானாகவே தடைப்பட்டு போகும். இந்த கிருத்திகை நட்சத்திரம் மூன்றாம் பாதம் அட்சய லக்ன புள்ளியாக வரும் போது மட்டும் தான் அடுத்தது திருமண வாய்ப்பு அப்படிங்கிற ஒன்று கொடுக்கும்.
அப்ப நீங்க பாத்துக்கோங்க எந்த காலகட்டத்தில் திருமணம் நடக்கும் அப்படிங்கறத தெள்ளத்தெளிவாக கூற முடியும். இதெல்லாம் நடந்திருக்கான்னு கேட்டீங்கன்னா நிறைய நடந்திருக்கு.
நீங்க திருமணம் ஆன ஜாதகங்கள் அப்படிங்கறது எடுத்து செக் பண்ணி பாருங்க. உங்க ஜாதகம் திருமணம் ஆயிருந்தாலும் அந்த காலகட்டத்தில எப்படி நடந்தது அப்படின்னு செக் பண்ணி பாருங்க. கடைசியா மூன்று, நான்கு வருடங்கள் திருமண தடை அப்படிங்கறது இருந்தது. அதுக்கு அப்புறம் தான் நடந்தது அப்படிங்கிற கேள்விக்குறி இருந்ததுன்னா உங்க ஜாதகம் இந்த கிருத்திகை நட்சத்திரம் ஒன்றாம் பாதம், இரண்டாம் பாதம், இன்னும் சில நட்சத்திர புள்ளிகள் போகும்போது திருமண வாய்ப்பே அங்கு கிடையாது அப்படின்னு சொல்லலாம்.
நன்றி.
WEBSITE: www.alpastrology.com
ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656
FULL VIDEO LINK: https://youtu.be/t-oHQHqFNfE?si=_8bAvvDwiyoECS82