
ஆன்மீக தமிழ் நண்பர்களுக்கு வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? நிறைய தகவல்கள் அப்படிங்கறது ஆன்மீக தமிழ் சேனல்ல நமக்கு கிடைக்குது. இன்னைக்கு என்ன பார்க்க போறோம்னா குபேர வழிபாடு. குபேரனை வழிபாடு பண்ணினா என்னென்ன பலன்கள் நமக்கு கிடைக்கும். அதை எப்படி பண்ணலாம். அந்த வழிபடக்கூடிய முறை என்னது அப்படிங்கறது நாம இப்ப பாப்போம்
உங்களுக்கு பெரும்பணத்தை தரக்கூடியவர் யாரு? அப்படின்னா குபேரர். குபேரர் யார்? அப்படின்னா பெருமாளுக்கே கடன் கொடுத்தவர். குபேரர் அப்படின்னு சொல்லலாம். இந்த கதை கேள்விப்பட்டிருப்போம். பெருமாள் கல்யாணத்துக்காக குபேரர் இடத்தில் இருந்து கடன் வாங்கி இருக்காரு. அப்போது, திருப்பதி மலைக்கு யாரெல்லாம் சென்று காணிக்கை போடுகிறார்களோ, அந்த உண்டியலோட பெயர் குபேர உண்டியல் அப்படின்னு சொல்லுவாங்க. என்னைக்கு அந்த குபேர உண்டியல் இல்லாமல் இருக்குதோ, அன்னைக்கு தான் அவருடைய கடன் தீர்ந்தது அப்படிங்கறது கதை நம்ம முன்னோர்கள் சொல்லி நாம கேள்விப்பட்டு இருப்போம்.
அதே மாதிரி தான் குபேரனுக்கு அள்ள அள்ள குறையாதது. இப்போ உங்க எல்லாருக்குமே தெரியும். திருப்பதி உண்டியல்ல எவ்வளவு இருக்கும் அப்படிங்கறது. அப்போ அது வந்து ஒரு அட்சய பாத்திரம் அப்படிங்கறது தான் உண்மை. அதே மாதிரி தான் குபேர வழிபாடு யாரெல்லாம் பண்றீங்களோ கண்டிப்பாக உங்களுக்கு அட்சய பாத்திரமாகவே உங்கள் வீடு நிறையும் அப்படிங்கறதுதான் உண்மை.
குபேரனுக்கு என்னென்ன வழிபாடுகள் பண்ணலாம். குபேரனை மாத்திரம் கும்பிட்டா போதுமா? அவர்களோடு மகாலட்சுமியும் சேர்ந்து வழிபடுவது தான் சிறப்பு. ரெண்டு பேரையும் கூப்பிட்டாங்களே. குபேரனை கூப்பிட்டாலே மகாலட்சுமி தாயாரும் சேர்ந்து வந்துருவாங்க அப்படிங்கறது தான் உண்மை. சரி இதை எப்படி நம்ம வழிபாடு பண்ணலாம்? என்ன செய்யலாம்?
குபேரருக்காக ஒரு 101 ரூபாய் காயின் எடுத்து வச்சுக்கோங்க. காயின் எடுத்து வச்சிட்டு, நமக்கு குபேர கோலம்னு சொல்லுவாங்க. அந்த நம்பரை அதுல எழுதி தினமும் அந்த ஒரு ரூபாய் துட்டெடுத்து, ஒரு ஒன்பது ரூபாய் காயின் இருக்கும் அந்த காயின்ல மஞ்சள் குங்குமம் வைத்து. ஒரு ரூபா காயின்ல ஒன்பது காயின் எடுத்து அந்த குபேர கோலம் போட்டு, ஒரு பலகைல போடணும். அந்தப் பலகையை நல்லா அலம்பிட்டு, மஞ்சள்ல அந்த பலகைல தடவிட்டு அதுக்கப்புறம் அந்த எந்திரம் வரைவாங்க. குபேர எந்திரம் அப்படிங்கறது அதற்கு பெயர். அதை வரைந்து அதுல நம்பர்களை எழுதிட்டு அதுல ஒரு ரூபாய் துட்டு அப்படிங்கறது வைங்க.
மஞ்சள் குங்குமம் வைத்து வழிபடுங்க. அது ரொம்ப நல்ல வழிபாடு. குபேரனே உங்க வீட்ல வரவைக்கக்கூடிய ஒரு மகாசக்தினு சொல்லலாம். இதை பண்ணுவதனால உங்க வீட்ல உள்ள சில குறைபாடுகள், வாஸ்து சம்பந்தப்பட்ட பிரச்சனை அப்படிங்கறதும் போகும் அப்படிங்கறது உண்மை.
இது நிறைய நண்பர்களுக்கு அது தெரியாமலேயே இருக்கு அப்படிங்கிறது தெரிஞ்சுக்கோங்க. அப்போ 101 காயின் எடுத்துக்கோங்க மகாலட்சுமிக்கு புதிய ஒரு ரூபாய் காயின். எங்களுக்கு புது காயின் கிடைக்காது. ஒரு ரூபா துட்டு 101 அதை மஞ்சள் தண்ணில அலம்பிக்கோங்க. ஒரு சின்ன மண் கலசம் வாங்கி அந்த துட்ட சுவாமிக்கு அர்ச்சனை பண்ணுங்க. வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி அந்த துட்ட வச்சு நீங்க அர்ச்சனை பண்ணுங்க.
அந்த ஒரு ரூபாய் காயினை வைத்து அந்த மகாலட்சுமிக்கு அஷ்டோத்திர அர்ச்சனை 101, 108 ,111 காயின் எடுத்து வச்சுக்கோங்க. உங்க குடும்பத்துல உள்ள எல்லாருமே சேர்த்து ஒரு ரூபாய் துட்டு எடுத்து கடைசில அந்த துட்ட மனசார வேண்டிட்டு அந்த மகாலட்சுமிக்கு அர்ச்சனை பண்ணி அதை சுவாமி பாதத்தில் போட்டுட்டு. அந்த துட்டு எடுத்து சின்ன ஒரு மண் கலசத்துல போட்டு அங்கேயே வைங்க. இது குபேர வசியம் அப்படின்னு சொல்லுவாங்க. மகாலட்சுமிக்கு உண்டான அம்சம்னு சொல்லுவாங்க.இவங்க ரெண்டு பேரையும் வச்சுக்கோங்க.
இது சரி இதை பண்ணிட்டு வேற என்ன பண்ணலாம்? இப்போ நீங்க எல்லாருமே மாதமானால் சம்பளம் அப்படின்னு கிடைக்கும். முதல்ல எங்க குடுப்பீங்க அப்படின்னா கடனுக்கு தான். ஏன்னா உங்க பேங்க்ல இருந்து டைரக்டா போறது EMI க்கு. அவங்களே எடுத்து இருப்பாங்க. அந்த மாதிரி பண்ணாதீங்க. எப்போ சம்பளம் முதல்ல போடுறாங்களோ, முதல்ல அதுல இருந்து 101 எடுங்க. எடுத்துட்டு 11 ரூபாய்க்கு பத்து ரூபாய்க்கு உப்பு பாக்கெட் அப்படிங்கிறது வாங்குங்க. உங்களுக்கு உப்புங்கறது பெருகும். அது வந்து உங்களுக்கு பணம் வசியத்தை கொடுக்கும். முதலிலேயே சொல்லியிருந்தோம், ஒரு கிரகப்பிரவேசத்திற்கு வீட்டுக்குள்ள கால் எடுத்து வைக்கும் போது உப்பு , அரிசி , சர்க்கரை அப்படிங்கறத உள்ள கொண்டு போகணும். அதே மாதிரி மகாலட்சுமி அம்சமான முதல்ல நீங்க யாரை வாங்கணும்னா உப்பு வாங்கணும். மஞ்சப்பொடி வாங்கணும். அடுத்து என்ன வாங்கணும்னு கேட்டீங்கன்னா ஊறுகாய் வாங்கணும். என்னங்க இது ஊறுகாய் சொல்றீங்கன்னா ஊறுகாய் வந்து குபேரருடைய மிகப்பெரிய வசியம்னு சொல்லலாம்.
உங்க வீட்ல எத்தனை விதமான ஊறுகாய் இருக்குதோ, அத்தனை விதமான குபேரருடைய அருள் உங்களுக்கு கிடைக்கும் அப்படிங்கறதுதான் உண்மை. ஊறுகாய்ல பலவிதம் இருக்கும். ஒரு வீட்டில் கண்டிப்பாக நான்கு விதமான ஊறுகாய் கண்டிப்பாக இருக்கணும். அப்படிங்கிறதுதான் அவங்க உங்க வீட்டுல பணத்தட்டுப்பாடு இருக்காது. நீங்க சாப்பிடுறீங்களா, சாப்பிடலையோ உங்க வீட்டு பிரிட்ஜ்ல எப்போதுமே அது இருக்கணும் அப்படிங்கிறத நீங்க தெரிஞ்சுக்கோங்க.
அதுக்கப்புறம் சில நாட்களுக்கு உங்க வீட்டுல ஏற்படக்கூடிய மாற்றங்கள் அப்படிங்கறது நீங்களே உணர்வீங்க அப்படிங்கறதுதான் உண்மை. அப்ப சொல்லிட்டோம் மகாலட்சுமி எப்படி வரவழைக்கிறது. குபேரனை எப்படி வரவழைக்கிறது.
அப்போ முதல்ல ஒரு சம்பளம் வாங்கிட்டீங்கன்னா முதல்ல செய்யக்கூடியது உப்பு, மஞ்சள் வாங்குறது ரெண்டு பாக்கெட் மஞ்சள் வாங்குங்க ஒரு பாக்கெட் வாங்க கூடாது. இரண்டு பாக்கெட் மஞ்சள் வாங்கலாம். சின்னதா இருந்தாலும் போதும் வாங்குங்கள் வாங்கி வச்சுக்கோங்க.
அதே மாதிரி ஊறுகாய் பாட்டில் அப்படிங்கறது சின்ன பாட்டிலா இருந்தாலும் வாங்கி வச்சுக்கோங்க. குபேர வசியத்தை இந்த குபேரத்திற்கு கண்டிப்பாக தருவாங்க அப்படின்னு சொல்லலாம்.
அதே மாதிரி அன்னதானத்திற்கு ஏதாவது ஒரு தொகையை குடுங்க. அது மிகச் சிறந்த பலனை கொடுக்கும். ஒரு 101 ரூபாயாவது உங்க காசுல இருந்து மாசம் மாசம் அன்னதானத்திற்கு கொடுப்பது குபேர வழிபாட்டிற்கு, குபேரனை வசியம் பண்றதுக்கு மிகச்சிறந்த பரிகாரமாக அமையும் அப்படின்னு சொல்லலாம்.
அதே மாதிரி பால்காரருக்கு பைசா கொடுங்க. இதுவுமே ஒரு லட்சுமி கடாட்சமாக தான் அங்க உங்களுக்கு இருக்கும். ஏன்னா இது பொருட்கள் மங்கல பொருட்களாக மாறிவிடும். சுப விரையமாக இது ஆகும். வளரும் ஆனா நீங்க EMI க்கு கொடுத்தீங்கன்னா அதுதான் உங்களுக்கு வளர்ந்துட்டே போகுமே தவிர. உங்களுக்கு தேவையானது வீட்டிற்கு வர வைக்கக்கூடியது அப்படிங்கிறது உங்களுக்கு அது வராது. முதல்ல அதை தெரிஞ்சுக்கோங்க.
அப்போ நம்ம வாழ்க்கையில எதை மாத்திக்கணும் அப்படிங்கறது நீங்கதான் முடிவு பண்ணனும்.
சரிங்க அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு பார்த்தீங்கன்னா கர்ப்பிணி பெண்களுக்கு ஏதாவது வாங்கி கொடுங்க. ஏன்னா அது கன்று அது வயித்தில் இருக்கக்கூடியது சுவாமி. உங்களுக்கு தெரியும் கர்ப்பிணி பெண்கள் கோயிலுக்கு வரக்கூடாதுன்னு சொல்லுவாங்க. ஏன்னா கர்ப்பிணி பெண்கள் கோயிலுக்கு வந்தாங்கன்னா அந்த அமர்ந்திருக்கிற தேவி சிலையே எந்திரிச்சு நிக்குமாம். அவ்வளவு ஒரு மகத்துவம் வந்து அந்த கர்ப்பிணி பெண்களுக்கு இருக்குதாம். அந்த வயிற்றில் இருக்கக்கூடிய சிசுவுக்கு இருக்குதாம். அப்ப நீங்க தெரிஞ்சுக்கோங்க கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் வாங்கிக் கொடுப்பது, மிக சிறந்த மகாலட்சுமி வழிபாடுக்கும் குபேரருடைய வசியத்திற்கும் நீங்கள் ஆளாவீங்க அப்படின்னு தெரிஞ்சுக்கங்க.
அதே மாதிரி வேற என்ன பண்ணலாம், அப்படின்னு கேட்டீங்கன்னா இல்லாதவங்களுக்கு உணவு வாங்கி கொடுங்க. இல்லாதவங்க யாருன்னா இப்போ நம்ம வீட்ல வேலை பாக்குறவங்க. அவங்களுக்கு நம்ம கொடுக்கிற மாச சம்பளம் மாத்திரமே. அவங்களுக்கு முடிஞ்சது ஒரு கிலோ அரிசி அரை கிலோ பருப்பு ஒரு சாம்பார் பொடி, ரசப்பொடி மண்ட வெல்லம் அரை கிலோ ஜீனி. இது வந்து அவங்க வாழ்க்கைக்கு உதவி. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் அவங்க மனசார சாப்பிடறதுக்கு ஒரு தானமாக இருக்கும். இது அன்னதானத்திற்கு ஒப்பான ஒன்று.
இந்த வேலைக்காரர்கள் அப்படிங்கறது சனி பகவானுக்கு நிகரானவர். அப்போ அந்த சனி பகவானுக்கு ப்ரீத்தி அப்படின்றது பண்றது இங்க மகாலட்சுமியை வரவேற்கிறது மகாலட்சுமிக்கு சுப செலவு செய்வதற்கு உண்டான ஒரு அமைப்பாக இருக்கும். அவங்களுக்கு நீங்க சொல்ல வேண்டாம். சொல்லாம வாங்கி கொடுங்க. அவர்கள் மனம் நெகிழ்வார்கள். அவங்க வயிறு கண்டிப்பாக உங்களுக்கு வாழ்த்தும் அப்படின்னு சொல்லலாம். இதெல்லாம் குபேர வசியத்திற்கு ஒரு சிறந்த யோகமாகவே அமையும் அப்படிங்கறது சொல்லிக்கிறேன்.
அனைவருக்கும் நன்றி.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வீடியோ லிங்க் : https://youtu.be/e9JvoqHjXnU?si=fJp_TbVyMkjTgAnM
ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656