Blog

தாய் சேய் உறவு – ALP முறையில் விளக்கம்

ALP அஸ்ட்ராலஜர் ஸ்ரீ குரு சாந்தகுமார்

தாய் பாசம் எப்படிப்பட்டது

தாய் பாசம் எப்படிப்பட்டது ALP ஜோதிட முறையில் அஸ்ட்ராலஜர் ஸ்ரீ குரு சாந்தகுமார் அவர்களின் பார்வையில் ஒரு நிகழ்வு.

வணக்கம்.

இந்த தாய் பாசம் இதை பற்றி  இன்னைக்கு ஒரு நிகழ்வு பேசலாம் அப்படின்னு.

இந்த மிதுன லக்னம் மற்றும் தனுசு லக்னம் இந்த ரெண்டு லக்னமும் ALP  போகும்போது இருக்கிற நிகழ்வுகள் பார்த்தீங்கன்னா இவங்க தாயினுடைய டாமினேஷன் ரொம்ப ஜாஸ்தியா இருக்கும்.

நான்காம் பாவகம் :

தனுசுக்கு நான்காம் பாவகம் மீனம். மிதுனத்துக்கு நான்காம்  பாவகம் கன்னி. தனுசினுடைய அதிபதி தான் மீனத்துக்கும் அதிபதி. குரு பகவான். அப்ப ஜாதகரும் , தாயும் ஒரே சிந்தனையோடு இருப்பாங்க. அப்படின்னாலும், தாயிலிருந்து தன்னுடைய அந்த குழந்தை ஜாதகர் பார்த்தீங்கன்னா பத்தாம் பாவகமா இருப்பதனால் தாயினால் அழுத்தம் இருக்கும்.

இந்த தாய் எப்படியும் அக்கறை. தாயிடம் இருந்து கெடுதல் நடக்காது. அப்படின்னு நாம பேசுறது கூட தப்பு. கரெக்டா. ஆனா இந்த பாசம் அப்படிங்கிற பேர்ல ரொம்ப டாமினேட் பண்ணுவாங்க. அவங்களுடைய எல்லா முடிவுகளையும் ஜாதகருடைய அத்தனை முடிவுகளையும் தாயே முடிவெடுக்க முயற்சி செய்வாங்க.

இதே தான் மிதுனத்துக்கும் நடக்கும். மிதுனத்துக்கு  நான்காம் வீடான கன்னி. அதன் அதிபதி புதன் பகவான். இதுவே தான் மிதுனத்துக்கும் அதிபதி.

அப்ப தாயும் மகனோ மகளோ ரெண்டு பேரும், ஜாதகரோ ஒத்த சிந்தனையில் இருப்பாங்க. ஆனால் தாய்க்கு அது பத்தாம் வீடாக வர்றதுனால இந்த அழுத்தம் ரொம்பவே ஜாஸ்தியா இருக்கும். ஒத்த சிந்தன அக்கறை ஜாஸ்தி ஆனா அதனுடைய அழுத்தங்கள் வேறயா இருக்கும்.

குழந்தையும், பெற்றோர்களும் :

குழந்தைகளை வளர்க்கும் போது அவஙர்களை சுய சிந்தனைக்கு விடுவது ரொம்ப முக்கியம். ஒரு குறிப்பிட்ட வயசு வரைக்கும் இந்த பேரண்டிங்றது ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான விஷயங்க.

ஒரு பேரண்டிங்னுடைய நோக்கம் என்னன்னா அந்த குழந்தையை வெளியில் இருந்து வரக்கூடிய பாதுகாப்பின்மையிலிருந்து பாதுகாப்பது தான் நோக்கம். ஒரு வேலி மாதிரி. அப்போ ஒரு குழந்தைகிட்ட விவரம் தெரிகிறது வரைக்கும் அதுக்கு வெளியில என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்க முடியாது. தாய் அரவணைப்புல இருக்கிறது சரியும் கூட. 

சுய சிந்தனை அவசியம் :

ஆனால் குறிப்பிட்ட வயசு ஒரு 12 - 13..னு தாண்டிட்டாலே தன்னுடைய சுய சிந்தனைகள் அதிகமாகும் குழந்தைகளுக்கு.

ரொம்ப முக்கியம் அது வளரணும். அப்பதான் அந்த குழந்தை எதிர்காலத்தில தன்னம்பிக்கையோடு வாழ முடியும். அதற்கு இடம் கொடுக்கணும். அப்போ அந்த வேலி பெருசாகும். பெருசா ஆகும்போது இருக்கிற பிரச்சனை என்னன்னா அது பாதுகாக்கிறேன் பாதுகாக்கிறேன்னு வெளியில என்ன இருக்குனே தெரியாத அளவுக்கு ரொம்ப கட்டுக்கோப்பா வச்சுக்கிட்டாங்கனா அந்த வேலினாலயே அந்த குழந்தை வளர்ச்சி இல்லாமல் போறதுக்கான சூழ்நிலை அமையும்.

ஒரு சில குழந்தைகள் என்ன பண்ணும் அப்படின்னா துணிஞ்சு வேலியை தாண்டி போயிடும். இந்த வேலி தாண்டற குழந்தைகளுக்கும் இதுல ஜெயிச்சு வந்துருச்சுன்னா சந்தோஷம். ஜெயிக்க முடியலேன்னா வாழ்நாள் முழுக்க  சித்ரவதை.

அப்போ அந்த வேலிதான் அதற்கு இடம் கொடுக்கணும். வேலி நல்லா பெருசாக்கணும்.

நோக்கத்தைப் புரிய வைத்தல் :

அந்த குழந்தைகிட்ட, என் குழந்தைக்கு நான் சொன்னது, என்னுடைய மகனுக்கு நான் சொன்ன வார்த்தைகளை இங்க நான் பகிர்ந்துக்கிறேன். இந்த வேலி உன்னுடைய பாதுகாப்புக்காக இருக்கு. இதுக்குள்ளார இருக்கிறது வரைக்கும் நீ சேஃப். உனக்கு எது நடந்தாலும் நான் பொறுப்பு. உனக்கு எவ்வளவு நாளும் சுதந்திரமா இருக்கலாம். நான் பெரிய வேலியாவே இருப்பேன்.

உன்ன கட்டுப்படுத்துவது என் நோக்கம் இல்லை. ஆனால், உன்னை பாதுகாக்கிறது என்னோட நோக்கம் அப்படின்னு சொன்னேன்.

அடுத்த நிகழ்வு என்ன சொன்னனா இது தாண்டி போயிட்டன்னா எனக்கு பொறுப்பில்ல. எனக்கு கண்ட்ரோல்ல இருக்காது. தாண்டாம பாத்துக்கோ நீ எவ்வளவுக்கு எவ்வளவு கரெக்டா இருக்கியோ அவ்வளவுக்கு அவ்வளவு வேலி பெருசாயிட்டே போகும். இந்த உலகமே உன்னோடது ஆயிடும். இந்த வேலியே இல்லாத நிலைறது நீ நடந்துக்கிறது பொறுத்தது.

முடிவு எடுப்பதும், மூன்றாம் பாவகமும் :

ஏன்னா சரியான முடிவு எடுக்குறோமா தவறான முடிவெடுக்கிறோமா தெரியாம அவசர கதிக்கு ஒரு ஆர்வக்கோளாறுல இந்த தைரியம் கூடுதலா இருக்குறதுனால குறிப்பா, ஜென்ம லக்னத்தில் இருந்து மூன்றாம் பாவகம் போகும் குழந்தைகளுக்கு தைரியம் கூடுதலாக இருக்கும்.

அதன் செயல்பாடுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். நம்ம என்னதான் பண்றோம் அப்படின்னு இல்லாம ஒரு த்ரில்லிங் அனுபவத்துக்கு அவங்க ரிஸ்க் எல்லாத்தையும் எடுப்பாங்க. அத அந்த குழந்தைக்கு இந்த வேலி அப்படிங்கிற விஷயத்தை புரிய வைக்கணும். இதெல்லாம் செய்யாத. இதெல்லாம் செஞ்சு கூட பார்க்க கூடாது. அப்படிங்கிற விஷயத்தை இந்த வேலியா இருந்து இடம் கொடுத்து புரிய வைக்கணுமே தவிர, ஒவ்வொரு செயலுக்கும் கட்டுப்பாடு விதிச்சி விதிச்சி இந்த குழந்தையை வளர்க்கக்கூடாது.

இந்த வேலி பெருசாகிறதும் சிறுசாகிறதும் அந்த குழந்தை நடந்துக்கிறது பொறுத்தது. எவ்வளவு ஓப்பனா இருக்கு. எவ்வளவு உண்மையா இருக்கு. அப்படிங்கிற விஷயத்தை பொறுத்து அதுக்கு இடம் கொடுக்கணும்.

குழந்தைகளைப் பாராட்டுங்கள் :

ஒரு குழந்தை தப்பு பண்ணிட்டா அது வந்து சொல்லும்போது கண்டிக்கிறது விட முதல்ல பாராட்டணும். பரவால்ல உண்மையை சொல்லிட்ட. உனக்கு அதுல பாராட்டுறேன்.

ஆனால் இந்த தப்பை நீ இந்த காரணத்தினால இது செய்யக்கூடாது அப்படிங்கற நிகழ்வை திரும்ப சொல்லணும். முதல்ல பாராட்டிட்டு அப்புறமா அந்த தவறு சரி பண்றதுக்கு சொல்லி குடுங்க.

எடுத்த எடுப்புல திட்ட ஆரம்பிச்சிங்கனா உங்ககிட்ட ஓபனா வந்து பேசுவதற்கான இடத்தை நம்ம தான் க்ளோஸ் பண்றோம். ஒரு சில பேரன்ட்ஸ் என்ன பண்ணுவாங்க, திட்டுவாங்க. திட்றது என்றது ஒரு குழந்தை பணம் எடுத்துருச்சு பாக்கெட்டிலிருந்து. அத பொருத்தவரைக்கும் என்னுடைய அப்பாவோட பணம் அம்மாவோட பணம் அவ்வளவுதான் அந்த குழந்தைக்கு.

ஆனால் குழந்தை அடிக்கும் போது என்ன பண்ணுவாங்கன்னா ஏன் பணத்த திருடனனு கேட்பாங்க. அதுவரைக்கும் திருட்டுங்கிற வார்த்தையே அந்த குழந்தைக்கு தெரிஞ்சிருக்க கூட இருக்காது. இப்படி திட்டும் போதுதான் ஓ இதுதான் திருட்டா அப்படின்னு திருட்டை நம்மதான் சொல்லித் தாரோம்.

வார்த்தையில் கவனம் :

அப்போ,  வார்த்தைகளை குழந்தைகள் கிட்ட பேசும்போது சர்வ ஜாக்கிரதையா பேசணும். இதுதான் அந்த வேலி எங்க இருக்கணும்றது. ஆக்சுவலா குழந்தை கத்துக்க வேண்டியது எதுவும் இல்லை.

பேரண்டிங்கா இருக்கிற நம்மதான் குழந்தைகிட்ட எப்படி நடந்துக்கணும் அப்படின்னு கத்துக்கிட்டோம்னா அந்த குழந்தையோட எதிர்காலம் மிக சிறப்பா இருக்கும். அந்த குழந்தைக்கு ஏத்த மாதிரி நம்ம மாறதும். நம்மளுக்கு ஏத்த மாதிரி அந்த குழந்தை மாற கத்துக்கிட்டா தான் அந்த குழந்தை வாழ்க்கையை கத்துக்கும்.

அது இஷ்டத்துக்கு வாழனும் அப்படின்னு விடாம. எங்க விடணும் எங்க விடக்கூடாது. ஒரு காத்தாடிக்கும் நூலுக்கும் இருக்கிற தொடர்பு பேரண்டிங். அது எங்க இழுக்கணும் எங்க லூஸ் விடனும் தெரியனும்.

தனித்தனி குணாதிசயங்கள் உண்டு :

உங்க பேரண்ட் என்ன பண்ணாங்கறத வச்சு உங்க குழந்தைக்கு நீங்க நடத்தாதீங்க. இந்த குழந்தைக்கு எது பண்ணா நல்லா இருக்கும். அப்படின்னு பார்த்து பண்ணுங்க. ஏன்னா குழந்தைகள் ஒன்னு ஒன்னும் தனித்தனி குணாதிசியம் கொண்டவங்க.

எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. உங்க பேரண்ட் உங்களுக்கு செஞ்சதுக்கும் நீங்க இந்த குழந்தைக்கு செய்றதுக்கும் பல வித்தியாசங்கள் இருக்கு. இதை உணர்ந்து செயல்படுங்க. உங்கள் குழந்தை எதிர்காலம் உங்கள் கையில்.

நன்றி.

வீடியோ லிங்க் :

https://youtu.be/m6pbuZZc8sM?si=D1wo2D8VLSWIUqb2

WEBSITE: www.alpastrology.com

ALP ASTROLOGY OFFICE: 9786556156 / 9363035656


About author

ALP Astrology

Admin=> Have all rights




Scroll to Top