Blog

வாழ்க்கையில் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள் - ALP ஜோதிட முறையில்.

ALP ஜோதிட ஆசிரியர் டாக்டர். சாந்தி தேவி ராஜேஷ்குமார்.

ஜோதிடம் டிவி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.

இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

ALP அஸ்ட்ராலஜர் ALP ஜோதிட ஆசிரியர் டாக்டர்.  சாந்தி தேவி ராஜேஷ்குமார்.

நம்ம எல்லாருமே எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் இருக்காங்கிற கேள்விதான் முதல்ல நம்ம கிட்ட கேக்குறாங்க. காரணம் கஷ்டப்படாமல் நன்மை அடைஞ்சா. நிறைய டிமானிடேஷன் நோட்டு மாத்துனப்பலாம் நிறைய கொண்டு போய் மூட்டை மூட்டையாக அங்க கிடந்தது இங்க கிடந்ததுனுலாம் சொல்லும்போது நிறைய பேர் எதிர்பார்த்தாங்க. எப்பா போறவங்க எங்க வீட்ல ஒரு மூட்டையை போட்டு போக கூடாதா? அப்படிங்கற மாதிரி எல்லாம். அந்த மாதிரி எதிர்பாராத லாட்டரி டிக்கெட்ல பணம் கிடைக்குமா? ஷேர் மார்க்கெட்ல எனக்கு பணம் கிடைக்குமா? அப்படின்னு நிறைய கேள்விகள் நிறைய பேருக்கு இருக்கு. எதிர்பாராமல் ஒரு திடீர் அதிர்ஷ்டம் ஒரு ஜாதகத்துல கிடைக்கணும் அப்படின்னா அதற்கு அந்த எதிர்பாராத திடீர் நிகழ்வை தரக்கூடியது ராகு கேது எட்டாம் இடமும் தான். இந்த ராகு கேதுவும் எட்டாம் இடமும் ஒருத்தருக்கு நல்லா இருக்கு அப்படின்னா கண்டிப்பா எதிர்பாராத திடீர் யோகங்கள் அப்படிங்கறது நிச்சயமா உண்டு.

சரி இது எப்படி நம்ம தெரிஞ்சுக்க போறோம். அப்படிங்கற கேள்வி நிறைய பேருக்கு இருக்கலாம். முதல்ல நம்ம எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்கள் அப்படிங்கறது நம்ம எதிர்பார்க்காத நேரம் கிடைக்கிறது தான். இந்த நேரம் வரும்னு நாங்க சொல்லிடுவோம். உடனே நீங்க என்ன பண்ணுவீங்க ஓ நம்ம லக்னத்துக்கு சொல்லிட்டாங்க இது வரும் இது வரும் இது வரும் நெனச்சிட்டு இருந்தீங்கன்னா எங்கங்க வரும். நீங்க எதிர்பாக்காத நான் கொடுக்கிறேன் அப்படிங்கறது தானே அதோட நீதி. அப்போ இது தெரிஞ்சுக்கணும் அப்படின்னு நினைக்க கூடாது. ஆனால் ஆசை யாரை விட்டது. நம்ம அதை தெரிஞ்சுக்குவோம். ஏதோ ஒரு ஓரத்தில் போட்டு வச்சுக்குவோம். எப்போவாது நடக்குதான்னு அப்படின்னு நினைக்கிறீங்கல.

அந்த மாதிரி திடீர்னு அது கொஞ்சமோ சின்னதோ பெருசோ அப்பப்போ தொட்டுக்கிற மாதிரி அப்பப்போ நமக்கு ஜாக்பாட் அடிக்கக்கூடிய  ராசிகள் என்ன அப்படின்னு நம்ம பார்த்திடலாம்.

மேஷம்

இந்த மேஷத்திற்கு ஜாதகரே எட்டாவது வீடு. திடீர் நிகழ்வுங்கறது எட்டு தான் கொடுக்கும். மேஷ லக்னத்திற்கு அதிபதியே எட்டுக்கும் அதிபதி இதை நீங்கள் லக்னமா எடுத்துக்கிட்டாலும் சரி. ராசியாக எடுத்துக்கிட்டாலும் சரி. அது உங்க விருப்பம். நாங்க எப்படி எடுத்துக்கிடுவோம் அட்சய லக்ன பத்ததில இப்போ மேஷ லக்னம் உங்களுக்கு போகுதா. உங்களுக்கு அப்பப்போ திடீர் அதிர்ஷ்டம் அப்படிங்கறது உண்டு.

ஏன்னா எட்டுங்குறது திடீர், எதிர்பாராத திடீர் நிகழ்வுகளை தரக்கூடியது. அப்போ எதிர்பாராத திடீர் நிகழ்வுகளை அந்த செவ்வாயே உங்களுக்கு கொடுக்கிறதுனால அந்த திடீர் அதிர்ஷ்டம் உங்களுக்கு இருக்கானா இருக்கு.

ரிஷபம்

இந்த ரிஷபத்திற்கு என்ன அப்படின்னா ரிஷபத்திற்கு எட்டாம் இடத்தில் அதிபதியே 11ஆம் இடத்துக்கும் அதிபதியா போயிடுறார் திடீர் அதிர்ஷ்டம் அங்கு லாபமா மாறிடும். அப்போ ரிஷப லக்னம் போகும்போது உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்திற்கான வாய்ப்புகள் இருக்கானா உண்டு.

மிதுனம்

எட்டாமிடத்தில் அதிபதியே பாக்கியமாகவும் மாறிடுகிறார். அப்ப திடீர் பாக்கியம். அதாவது இது எப்படி எடுத்துக்குவோம், இப்போ ஒரு ப்ராப்பர்ட்டி இருக்கு நம்ம அந்த காலத்துல எல்லாம் செட்டிநாட்டில இந்த வழக்கம் எல்லாம் உண்டு. புள்ள கூட்டுறது அப்படின்னு ஒரு வழக்கம் உண்டு.

குழந்தை இல்லாதவர்கள் பிள்ளையாக ஒரு குழந்தையை தத்தெடுத்து, அவங்களுக்கு வேண்டிய பையனுக்கு பொண்ணுக்கு திருமணம் செஞ்சு வச்சுருவாங்க. அப்ப பொண்ணுங்க வீட்ல இருக்காங்க அப்படின்னா அவங்களுக்கு ஆண் வாரிசு இல்லைன்னா அந்த ஆண் வாரிசுக்காகவே அவங்க இன்னொரு குழந்தையை தத்து எடுத்து அந்த குழந்தைக்கு அந்த பொண்ணை வீட்டோட மாப்பிள்ளையாக்கிக்கிறது தான் இங்க புள்ள கூற்றதுனு பேரு. அப்ப அந்த சொத்து பூராமே அந்த மகனுக்கு தான் போகும்.

இன்னொரு நிகழ்வு இருக்கு. கொள்ளி வச்சா சொத்து கிடைக்கும் அப்படின்னு ஒன்னு. ஆண் பிள்ளை இல்லாதவர்கள் பிள்ளை இல்லாதவர்களுக்கு கொள்ளி வைக்கிறாங்கன்னா, அந்த கொள்ளி வைத்தவனுக்கு தான் அந்த சொத்து கிடைக்கும். இந்த நிகழ்வு நான் நிறைய கேள்விப்பட்டிருக்கேன். எனக்குத் தெரிஞ்சவர் ஒருத்தர் அப்படித்தான் ஒரு வயசானவர் அவருக்கு பிள்ளை இல்லை. அதனால போய் கொள்ளி வச்சாரு அவர் வச்சிருந்த சொத்த அவருக்கு கொடுத்துட்டாங்க.

என்ன வச்சிருந்தார்?

 ஒரு தள்ளு வண்டி வச்சிருந்தார். இந்தப்பா நீ கொள்ளி வச்ச இதை எடுத்துட்டு போ. இதுதான் அவருடைய சொத்து அப்படின்னு கொடுத்தாங்க. அந்த மாதிரி நிறைய நிகழ்வுகள். இந்த மிதுனத்திற்கு இது சாத்தியமானா? சாத்தியம்.

ஏன்னா எட்டாம் இடத்தின் அதிபதியே ஒன்பதுக்கும் அதிபதியானதுனால ஒன்பதுங்கிறது பாக்கியம். நம்மை எதுவுமே செய்யலைனாலும் நம்மை தேடி வருவது தான் பாக்கியம். அந்த பாக்கியம் இருக்கா? திடீர் திடீர்னு இருக்கு.

அது பெருசு சிறுசு அப்படிங்கற அளவு எல்லாம் நம்ம செய்த பூர்வ புண்ணிய வினையின் அளவைப் பொறுத்தது. அதனால திடீர் நிகழ்வுகள் திடீர் அதிர்ஷ்டம். அப்போ கப்போ ஜாக்பாட் மாதிரி ஒரு சந்தோஷத்தை ஒரு மகிழ்ச்சியை தரக்கூடியதாக அமையுதா? அப்படினா அமையுது.

சிம்மம்

சிம்மத்திற்கு அந்த திடீர் அதிர்ஷ்டம் இருக்கா? இருக்குங்க. இவங்க பங்கு வர்த்தகத்துல இவங்க எதையாவது ஒரு லாங் டைம் இன்வெஸ்ட்மெண்ட் போட்டு வச்சிருக்காங்கன்னு வச்சுக்கோங்களேன் எதிர்பாராமல் சரி இருக்கட்டும் ஏதோ ஒரு சேவிங்ஸ்சா இருக்கட்டும். எல்லாரும் சொல்றாங்க பங்கு வர்த்தகத்துல நான் அவ்வளவு சம்பாதித்தேன் இவ்வளவு சம்பாதிச்சேன்னு. நம்மளும் தான் போட்டு வைப்போமேனு போட்டு  வைக்கிறாங்கனு வச்சுக்கோங்களேன்.

ஏதாவது அவங்க போட்டு வச்ச ஷேர் ஒரு நாளைக்கு திடீர்னு ஏறும். அதுல ஒரு சேர் அவங்களுக்கு லாபமா கிடைக்குமானா கிடைக்கும். இப்போ இது எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம்.

திடீர் திடீர்னு அவங்களுக்கு  பங்குச்சந்தை ஏற்றமெல்லாம்,  இன்ட்ரா டிரேடிங் இவங்க தல வச்சு கூட படுக்கக் கூடாது.  அப்புறம் நீங்க சொன்னீங்க நான் பங்கு வர்த்தகத்துல போட்டு வச்சேன். எனக்கு திடீர் அதிர்ஷ்டம் வரலைன்னு எல்லாம் கேட்கக்கூடாது. லாங் டைம் இன்வெஸ்ட்மெண்ட் அதுவும் எதிர்பாராமல் போடுங்க. நான் சொன்னேங்கிறதுக்காக போடாதீங்க. அப்படி போடும்போது உங்களுக்கு லாபம் இருக்கானா இருக்கு.

துலாம்

இந்த துலாம் லக்னத்திற்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் இருக்கா? இருக்குங்க. ஜாதகர் தான் அதை உருவாக்கிக்குவார். என்னைக்காவது ஒரு விதையை எங்கேயாவது தூவி விடுவார். அந்த விதை சரியான நேரத்தில் பலன் தருமானா பலன் தரும்.

நான் இன்னைக்கு நல்லா இருக்கேன். அதுக்கு நீங்க தான் காரணம். ஏதோ அந்த நன்றி உணர்வுக்காக நான் இத தரணும்னு விருப்பப்படுறேன். தயவு செய்து வாங்கிக்கோங்க. கூப்டு குடுப்பாங்க. அப்போ அந்த ஜாக்பாட், அதுவும் ஜாக்பாட் தான?. நமக்கு கிப்ட் ஆக கிடைக்கக்கூடிய அத்தனை நிகழ்வுகளும் ஜாக்பாட் தான். அப்ப அந்த ஒரு சூழ்நிலை இருக்கா அப்படின்னா துலாமுக்கு இருக்கு

விருச்சிகம்

இந்த விருச்சிகத்துக்கு என்ன ஆகும்னா அவங்களுக்கு எதிர்பாராத திடீர் நிகழ்வுகள் எதன் மூலம் கிடைக்கும்? ஏதாவது யாருக்காவது ஒப்பந்தத்துல ஏதாவது எதுக்காவது கையெழுத்து போட்டு இருக்காங்க. சைன் பண்ணி இருக்காங்க. இந்த விருச்சிகத்துக்கு எப்படி திடீர் அதிர்ஷ்டம் வரும் தெரியுமா? அவுங்க அண்ணன் போய் வெளிநாட்டில் சம்பாதிப்பார். சம்பாதித்து கொண்டு வந்து அப்பா அம்மா இருக்காங்க நம்ம தம்பி இருக்கானே என்று இடமோ வீடோ சொந்தமா அப்பா பேருல வாங்கி போட்டுடுவார்.

அப்பாக்கு ஏதாவது ஒரு ஆபத்து வந்துருச்சுன்னு வச்சுக்கோங்க. அப்போ சொத்து ரெண்டு பேருக்கும் பிரியும். கஷ்டப்பட்டது அண்ணன். இங்கே கிடைக்கிறது தம்பிக்கும் சேர்ந்து அந்த பங்கு அப்போ இது ஒரு விதமான ஜாக்பாட் தானங்க.

இந்த மாதிரி நிகழ்வுகளும் நிறைய நடக்கும். அப்போ இந்த விருச்சிகம் இந்த மாதிரி. அதுக்காக அண்ணன் எப்படா சொத்து வாங்குவான். எப்படா அப்பா பேருல எழுதுவான். எப்படா அம்மா பேர்ல எழுதுவான்லாம் காத்திருக்காதிங்க. காத்திருக்கும் சொத்தும் கிடைக்காது. அவர் சரியா கணக்கு வச்சிருந்து இந்த பாருங்க இதெல்லாம் நான் சம்பாதிச்சு வாங்கினது. இது எனக்கு தான் அப்படின்னு சொன்னார் என்றால் அப்புறம் நீங்க மாட்டிக்குவிங்க.

அதனால எதிர்பாக்காதீங்க. எதிர்பாக்காம இல்லைங்க அப்பா பேர்ல உள்ளது எனக்கும் என் தம்பிக்கும் நாங்க பிரிச்சு எடுத்துக்கறோம்னா அது ஒரு ஜாக் பாட் தான். அந்த மாதிரியான ஒரு நிகழ்வு இருக்கானா இருக்கு.

தனுசு

தனுசுக்கு ஜாக்பாட் இருக்கா கண்டிப்பா உண்டுங்க. தனுஷ் என்ன பண்ணும், இது உதாரணத்துக்கு தான் சொல்றேன். இப்படியும் அவங்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் அப்படிங்கறதுக்காக சொல்றேன். அவங்களுக்கு இரண்டாவது திருமண வாழ்க்கை அமைஞ்சது அப்படின்னா அது அவங்களுக்கு ஒரு பெரிய ஜாக்பாட்.

ஏன்னா வருமானத்தோடு அந்த பொண்ணு வரும்னு வச்சுக்கோங்களேன். அப்போ அதுவே ஜாக்பாட் தானே. சம்பாதிச்சு சம்பாதிச்சு கொடுக்கும். இங்க தலைவர் வாங்கி வாங்கி செலவு பண்ணிட்டே போகலாம் இல்லையா? அப்போ அதுவும் ஒரு ஜாக்பாட் தான். அதிர்ஷ்டம் பாருங்க எப்படி எல்லாம் வரும்.

ஏங்க அது வெளியே இருந்து வந்தா தான் அதிர்ஷ்டம்னு இல்ல. நமக்கு நல்லா சம்பாத்தியம் பண்ணி கொடுக்கிற மனைவி அமைந்தால் அதுவும் அதிர்ஷ்டம் தான். நமக்கு நல்லா சம்பாதித்து பண்ணி கொடுக்கிற அப்பா இருக்காரு அப்படின்னா அதுவும் அதிர்ஷ்டம் தான்.

அப்பா கவர்மெண்ட் ஜாப் ல இருக்காரு, ரிட்டயர் ஆயிடுறாரு அம்மா இருக்கிற வரைக்கும் அந்த சம்பளம் நமக்கு கிடைக்கும் பாருங்க. அதுவும் அதிர்ஷ்டம் தான்.

அன்றாட வாழ்க்கையில நாம பார்த்துட்டே இருக்கோம். அப்போ உழைக்காமல் வரக்கூடிய ஒவ்வொரு பைசாவும் நமக்கு அதிர்ஷ்டத்திற்கு சமம் தான். இப்படி வரக்கூடிய அந்த அதிர்ஷ்டம் அப்படிங்கிற அப்பைக்கு அப்ப ஜாக்பாட்டா நமக்கு சந்தோஷத்தை தரக்கூடியதாக இருக்கும். அதனால இதுவும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தில சேரும்.

கும்பம்

இந்த கும்பத்திற்கு மன மகிழ்ச்சியான பிள்ளைங்க சம்பாதிச்சு குடுத்துட்டே இருப்பாங்க. அதுக்காக கும்பம்லாம் நீங்க எதிர்பாக்காதீங்க. ஒரு உதாரணத்துக்கு சொல்ல வாரேன். ஐந்து எட்டு சம்பந்தப்படுறதுனால குழந்தைகளிடம் இருந்து எதிர்பாராத திடீர் நன்மைகள் எல்லாம் உங்களுக்கு கிடைக்கும்.

பங்கு வர்த்தகத்தின் மூலமாக எதிர்பாராத நன்மைகள். நான் முன்னாடியே சொன்ன மாதிரி லாங் டைம் இன்வெஸ்ட்மென்ட் பண்ணி வச்சீங்கன்னா அது உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கானா? இருக்கு.

அதனால இந்த எட்டு ராசிகளும் அப்பைக்கு அப்போ ஜாக்பாட் அடிக்கக்கூடிய ராசிகளாக இருக்கு அப்படிங்கிறத நீங்க பயன்படுத்திக்கோங்க.

ஜாக்பாட்ங்கிறது நான் முன்னாடியே சொன்னது மாதிரி தான். எல்லாரும் நம்மகிட்ட உழைப்பு இல்லாமல் நம்ம தேடி ஒரு நிகழ்வு வருது ஒரு கிப்ட் வாங்கி கொடுக்குறாங்க அப்படினாலே அதுவும் ஜாக்பாட் தான்.

சந்தோசமா மகிழ்ச்சியாக அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அதே மாதிரி நம்மளும் எதிர்பாராமல் அடுத்தவர்களுக்கு கிப்ட் கொடுத்துக்கிட்டே இருக்கணும். முன் கை நீண்டால்தான் முழங்கை நீளும்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா? நம்ம குடுக்கணும்ங்க.

இறைக்க இறைக்க நீர் ஊறும்னு சொல்லுவாங்க. நம்ம கொடுத்தோம்னா அது ரிட்டனாக கிடைக்கும். நாம கொடுத்து வச்சிருந்தா தான் இந்த ஜாக்பாட் கூட நமக்கு கிடைக்கும் அப்படிங்கறது மனசுல வச்சுக்கோங்க. எல்லாருக்கும் ஜாக்பாட் கிடைக்கணும்னு பிரார்த்தனை பண்ணிக்குவோம். மீண்டும் ஒரு இனிய நினைவில் சந்திப்போம். நன்றி.

 - ஸ்ரீ குரு திருமதி சாந்திதேவி ராஜேஷ்குமார்

        ( ALP ASTROLOGER)

 

 

 

full video link: https://youtu.be/8qgarB1dDvo?si=KZAJIv5Ok-7-JOIl

website: www.alpastrology.com

contact: 9786556156 / 9363035656


About author

ALP Astrology

Admin=> Have all rights




Scroll to Top