
ALP ஜோதிட ஆய்வு செய்தவர்:
~ ALP ஸ்ரீ குரு Dr. சத்ய நாராயணன், ALP ASTROLOGER.
அனைவருக்கும் வணக்கம்.
இந்த ஜாதகத்துல நாம என்ன பாக்க போறோம் அப்படின்னா திருமணம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள்.
திருமணம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் நடக்கணும். ஆனா நடக்கல, ஏன் நடக்கல? அப்படிங்கிற விஷயத்தை பற்றி பார்க்க போறோம்.
இந்த ஜாதகத்துல திருமணத்திற்கு யார் தடையாக இருக்காங்க? அப்படின்னு பாத்தீங்கன்னா அப்பாவே தடையாக இருக்கிறார்.
அந்தப் பையனுடைய அப்பாவே திருமணத்திற்கு தடையா இருக்கிறார். எப்படி? திருமணத்திற்கு போய் அப்பா வந்து தடையா இருக்க முடியுமா? அப்படின்னு ஒரு கேள்வி.
பையனுடைய திருமணத்திற்கு அப்பா உதவி தான் பண்ணனும். ஆனா அப்பா எப்படி தடையா இருக்காரு? அப்படிங்கிற விஷயத்தைப் பற்றி தான் நாம பார்க்கப் போறோம்.
அப்பா வந்து தடையா இருக்கிறாரா? ஏதாவது நம்மளால கற்பனை செய்ய முடியுமா?
இது அட்சய லக்ன பத்ததி முறையில மட்டும் தான் இதை நுணுக்கமாக கணக்கிட்டு சொல்ல முடியும்ன்னு சொல்லலாம்.
ஏன் அப்படின்னா, ஜென்ம லக்னத்தை வைத்து பார்க்கும் போது கிளியரா ஒரு பிக்சர் வராது. ஏன்னா ஜென்ம லக்னம்கிறது, ஒரே ஒரு இடத்துல ஜாதகர் பிறக்கிறார் அந்த ஒரு இடத்துல இருக்கும். அதனால தான் ALP லக்னம் மட்டும் தான் வச்சி பாப்போம். ஜென்ம லக்னம் வச்சு நாம கணக்கே பண்றது இல்லை.
ரீசன் என்ன? அப்படின்னு பாத்தீங்கன்னா, எந்த அளவுக்கு சிம்பிளா ஒரு ஜாதகத்தை ஆய்வு பண்ணனும் அப்படிங்கிற விஷயத்தை பற்றி பாக்கணும்.
மகனோட திருமணத்திற்கு அப்பா எப்படி தடையாய் இருக்க முடியும்? அப்படிங்கிற விஷயத்தைப் பற்றி தான் பேச போறோம்.
இப்போ இந்த ஜாதகத்தில் ALP லக்னம் மேஷம். லக்னாதிபதி செவ்வாய். செவ்வாய் மூன்றாம் இடமான மிதுனத்தில் உள்ளார். சாதகமாக இருக்கிறாரா? என்றால் சாதகமாக இருக்கிறார்.
இப்போ அவருக்கு என்ன போயிட்டு இருக்கு அப்படின்னா ALP லக்னம் மேஷம். நட்சத்திர புள்ளி பரணி - 3 ஆம் பாதம். பரணி நட்சத்திராதிபதி யாரு சுக்கிரன்.
இப்போ அட்சய லக்ன பத்ததி படிக்கிறவங்களுக்கு பரணி நட்சத்திரத்தின் உடைய நவாம்சம் எங்க விழும் அப்படின்னா துலாமில்.
பரணி நட்சத்திராதிபதி யார் சுக்கிரன். சுக்கிரனும் ஏழாம் வீடான துலாமில் சாதகமாக இருக்கிறார். மிதுனத்தில் உள்ள செவ்வாயும் சாதகமாக இருக்கிறார். மிதுனத்தில் உள்ள செவ்வாயிலிருந்து எனும் பொழுது துலாத்தில் உள்ள சுக்கிரன் ஐந்தாக வருவதால், சாதகமாக இருக்கிறாரா என்றால் சாதகமாக இருக்கிறார்.
செவ்வாயும் சுக்கிரனும் சாதகமாக இருக்கும் போது தடை எப்படி வருது? அப்படின்னு பாத்தீங்கன்னா, இந்த ALP லக்னத்திற்கு (மேஷம்) ஒன்பதாம் இடத்துக்குரியவர் யாரு அப்படின்னு பாத்தீங்கன்னா அப்பா.
அப்பா வந்து எங்க உட்கார்ந்து இருக்கார்? ஒன்பதாம் இடத்துக்குரிய குரு, ஒன்பதாம் பாவகத்தில் இருந்து (தனுசு) ஆறாம் பாவகத்தில் (ரிஷபம்) வந்து உட்கார்ந்து இருக்கார் அப்படின்னு நாம சொல்லலாம்.
இரண்டாம் பாவகம் அப்படின்னா என்ன? அப்படின்னு பார்த்தீங்கன்னா, இந்த ஜாதகருடைய பொருளுக்கு உண்டான ஒரு நிலைனு சொல்லலாம். இந்த ஜாதகருக்கு வருமானம் வேணும். இந்த ஜாதகருக்கு நிறைய சம்பாதிக்கணும். அப்படிங்கிற ஒரு நோக்கத்தோட இந்த ஜாதகருடைய அப்பா வந்து (ரிஷபத்தில்) உட்கார்ந்திருக்கிறார். இவர் (அப்பா) டிசைட் பண்றார்.
ஜாதகருடைய குடும்ப ஸ்தானம் அப்படின்னு சொல்லப்படுகிற, இரண்டாம் இடத்தில ஜாதகருடைய அப்பா உட்கார்ந்து இருந்துகிட்டு எனக்கு டௌரி வேணும். பெண் எவ்வளவு டௌரி குடுப்பாங்க. எவ்வளவு நகை போடுவாங்க. ஏன்னா குரு தனகாரகன். குரு அப்படின்னா பொன், தங்கம்னு தெரியும் எல்லாருக்குமே.
அப்போ இந்த ஜாதகருக்கு குடும்ப ஸ்தானத்துல உட்கார்ந்துகிட்டு என்னுடைய பையனுக்கு நீங்க எவ்வளவு நகை போடுவீங்க. அப்படின்னு டிமாண்ட் பண்ற இடத்துல இந்த ஜாதகருடைய அப்பா இந்த இடத்தில (ரிஷபத்தில்) உட்கார்ந்து இருக்கிறார்.
இந்த ALP லக்னம் (மேஷம்) ஜாதகர். ஜாதகருடைய வரவு ஸ்தானம் (ரிஷபம்). தனஸ்தானம். தனம், குடும்பம், வாக்கு, வரவு ஸ்தானம். வரவு ஸ்தானத்தில வந்து (குரு - அப்பா) உட்கார்ந்து இருக்காரு. ஜாதகருக்கு வருமானம் வரணும். ஜாதகருக்கு பொன் வரணும். பொருள் வரணும்.
அது இந்த ஏழாம் பாவம் அப்படின்னுசொல்லப்படுகிற (துலாம்) பாவத்திற்கு தடையாக இருக்கிறதுன்னு சொல்லலாம். எப்படி அப்படின்னு பாத்தீங்கன்னா, இந்த ஏழாம் பாவத்திலிருந்து (துலாம்) எண்ணிப் பாத்தீங்கன்னா, எட்டாம் பாவகமாக (ரிஷபம்) வருகிறது குரு.
அப்போ இந்த திருமணம்கிறது ஏழாம் பாவம். இந்த திருமண பாவத்திற்கு (துலாம்) எட்டாம் (ரிஷபம்) பாவமாக இருக்கிறது.
அதனால இவங்க அப்பா வந்து குடும்பத்துல உட்கார்ந்துகிட்டு, எனக்கு டௌரி வேணும். நகை எவ்வளவு போடுவாங்க. அப்படின்னு அப்பா வந்து இங்க உட்கார்ந்துகிட்டு டிமாண்ட் பண்ணிட்டு இருக்காரு அப்படின்னு சொல்லலாம். சொத்து வேணும், நகை வேணும், டௌரி வேணும் அப்படின்னு இங்க உக்காந்துகிட்டு அப்பா வந்து டிமாண்ட் பண்ணிட்டு இருக்காரு. அதனால இந்த ஜாதகருடைய திருமணம் தடைபடுகிறது.
இந்த ஒரு விஷயம் புரிஞ்சது அப்படின்னு சொன்னா, நாம அட்வைஸ் பண்ணலாம். எப்படி அட்வைஸ் பண்ணலாம் அப்படின்னா, இது சொல்லும் போதே அவருக்கு ரொம்ப ஷாக்கிங்கா இருந்தது. ஏன் அப்படின்னு சொன்னா இந்த திருமணம் சம்பந்தப்பட்ட விஷயம் அப்பாவினால் தடைபடுகிறது. அதனால இந்த கால கட்டத்துல அப்பா கொஞ்சம் டிமாண்ட் பண்ணாம இருந்தாரு அப்படின்னு சொன்னாலே திருமணம் நடக்கும். அப்படிங்கிற விஷயத்தை அட்வைஸ் பண்ணோம் நாம.
அதனால, எதனால ஜாதகருடைய திருமணம் தடைபடுகிறது அப்படிங்கிற ஒரு விஷயத்தை சிம்பிளா சொல்ல முடியும் அட்சய லக்ன பத்ததில. இந்த மாதிரி ஒரு சிம்ப்ளிசிட்டி ALP யில் தான் கிடைக்கும் அப்படின்னு சொல்லலாம். ஜாதகத்தை நீங்க படிக்கணும் அப்படின்னு நினைச்சீங்க அப்படின்னு பாத்தீங்கன்னா, கீழே இருக்கிற நம்பருக்கு கால் பண்ணுங்க. இப்போ வகுப்புகள் ஆரம்பிக்க இருக்கிறது.
நன்றி. வணக்கம்.
வீடியோ லிங்க்:
https://youtu.be/UoQS3or8umQ?si=85ThBUsS4YJSeF8o