Subscribe

Blog

ALP ஜோதிட முறையில் ராசி (ARP எனும் அட்சய ராசி) நகர்தலும், சந்திராஷ்டமமும். - ALP ஜோதிட ஆய்வு.

By: 

ALP ஸ்ரீ குரு. சத்ய நாராயணன்.

அனைவருக்கும் வணக்கம்.

சாதாரணமா எல்லாருமே சந்திராஷ்டமம் அப்படிங்கிற ஒரு விஷயத்தை பாப்பாங்க. ஏன் சந்திராஷ்டமம் பாக்குறாங்க அப்படின்னு பாத்தீங்கன்னா, இந்த மனோகாரகன் சந்திரன்னு சொல்லுவாங்க. சந்திரனுடைய அமைப்பு, மனோகாரகன் சந்திரன்னு சொல்றது, மனதை வந்து சந்திரனோட ஒப்பு வச்சு சொல்லுவாங்க. அதாவது மனம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சந்திரனுடைய அமைப்பைக் கொண்டது என்று சொல்லலாம். அப்போ காரகத்துவ ரீதியாக மனோகாரகன் சந்திரன் என்று சொல்வோம். 

இப்போ இந்த காலகட்டத்துல நம்மளுடைய சந்திரன் எட்டாம் இடத்திற்கு செல்லும் போது நம்மளுடைய புத்தி தவறான விஷயங்கள்ல வழிநடத்தி தவறான விஷயங்களை செய்யும்ன்னு சொல்லலாம். அப்போ இந்த காலகட்டத்தில் மட்டும் நம்ம கவனமாக இருப்பது நல்லது அப்படின்னு நாம சொல்லலாம். 

இப்போ அட்சய லக்ன பத்ததில பார்த்தீங்கன்னா, எப்படி இந்த சந்திராஷ்டமத்தை பாக்கணும் அப்படிகிற விஷயத்தை பதிவு பண்ணலாம். அப்படி சொல்லிட்டு தான் வந்திருக்கோம். இப்போ ஒருத்தருடைய ஜென்ம நட்சத்திரம் அப்படின்னு பார்த்தீங்கன்னா அஸ்வினி நட்சத்திரம். அஸ்வினி நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரம். இப்போ சந்திராஷ்டமம் எங்க இருந்து பாப்பாங்க அப்படின்னு பார்த்தீங்கன்னா, அந்த புத்தி பேதலிக்கக் கூடிய தன்மை எப்ப நடக்கும் அப்படின்னு பார்த்தீங்கன்னா, மேஷத்திற்கு எட்டாம் இடத்தில் சந்திரன் வரும் போது. பாரம்பரியத்தில என்ன சொல்லுவாங்க பாத்தீங்கன்னா சந்திரன் எங்க இருக்கோ அந்த இடத்துக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் வரும் போது, அதாவது விருச்சிக ராசியின் சந்திரன் வரும் போது,  சந்திராஷ்டமம்னு சொல்லுவாங்க. 

அப்போ மனது வந்து தவறான டெசிஷன் எடுக்கும். டென்ஷன் ஜாஸ்தியா இருக்கும். மனம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக இருக்காது. ஒரு டென்ஷன் கிரியேட் ஆகும். நம்ம ஏதாவது தவறான டெசிஷன் எடுக்குறதுக்கு உண்டான எல்லா வாய்ப்பையும் சந்திரன் கொடுக்கும் அப்படின்னு சொல்லலாம். 

அப்போ, இந்த கால கட்டத்துல அஸ்வினி நட்சத்திரம்னு சொல்லப்படுகிற, ஜென்ம நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரம். ஒரு ஜாதகர் பிறக்கும் போது அவருக்கு நட்சத்திரம் என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா அஸ்வினி நட்சத்திரம். அப்போ அட்சய லக்ன பத்ததில ARP ன்னு சொல்வாங்க. அட்சய ராசினு சொல்லுவாங்க. அதாவது அட்சய ராசி எப்படி வளரும் அப்படின்னு பாத்தீங்கன்னா, பிறக்கும் போது ஒருக்க அஸ்வினி நட்சத்திரம். அதுக்கப்புறம் பரணி நட்சத்திரம் வரும். அதாவது சுக்கிர திசை நடக்கும். ஒரு ஜாதகருக்கு பிறக்கும் போது கேது திசையில ஸ்டார்ட் பண்ணுவாரு. ஏன்னா அஸ்வினி நட்சத்திரம்னு சொல்லும் போது பிறக்கும் போது அவர் எங்க ஸ்டார்ட் பண்ணுவார் அப்படின்னா கேது திசைல தான் ஸ்டார்ட் பண்ணுவாரு. அதுக்கப்புறம் சுக்கிர திசை வரும். ஏன்னா பரணி நட்சத்திரத்தில அந்த சந்திரன் ட்ராவல் ஆகும்ன்னு சொல்லலாம். அதுக்கப்புறம் அவருடைய திசை வந்து கிருத்திகை நட்சத்திரம் அதாவது சூரிய திசையில் டிராவல் பண்ணுவாருன்னு சொல்லலாம். 

இப்போ அவருக்கு ரோகிணி நட்சத்திரத்துல, அதாவது சந்திர திசையில அவருடைய அட்சய ராசி பயணிக்கிறதுன்னு அர்த்தம். யாருக்கு அஸ்வினி நட்சத்திரம் போயிட்டு இருக்கு? அஸ்வினி நட்சத்திரம் பிறப்பினுடைய நட்சத்திரம். அவருக்கு இன்னைக்கு சந்திர திசை போயிட்டு இருக்கு அப்படின்னு பார்த்தீங்கன்னா அஸ்வினி பரணி கிருத்திகை ரோகிணி. ரோகிணி நட்சத்திரத்தில் சந்திர திசை நடந்துட்டு இருக்கு அப்படின்னு அர்த்தம். அப்போ மேஷத்தில் இருந்து டிராவல் பண்ணும். அதாவது அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி இந்த மூணு திசை கடந்து ரோகிணி நட்சத்திரத்துல சந்திர திசை நடக்குது அப்படின்னு அர்த்தம்.  ஒரு ஜாதகருக்கு சந்திர திசை ஸ்டார்ட் ஆகுது.

அப்போ சந்திர திசை போகும் போது,  அவருக்கு கோச்சாரச் சந்திரன், அதாவது இன்றைய சந்திரன். இன்றைய சந்திரன் துலாம் ராசியிலையோ அல்லது தனுசு ராசியிலோ செல்லும் போது எந்த ஒரு மேஜரான டெசிஷன் எதுவுமே எடுக்கக் கூடாது அப்படின்னு சொல்லலாம். ஒரு டெசிஷன் எடுக்கும் போது மேஜரான டென்ஷன் எதுவுமே எடுக்க கூடாது அப்படின்னு சொல்லலாம். இந்த மேஜரான டெசிஷன் ஏதாவது எடுத்தோம் அப்படின்னா அது தவறான ஒரு வழி நடத்துதல் ஏற்படுத்தக்கூடிய தன்மை இருக்கும் அப்படின்னு சொல்லலாம்.

அப்போ இந்த காலகட்டம் பாத்தீங்கன்னா, சந்திரன் துலாத்தில் சித்திரை 3,4 சுவாதி- 1,2,3,4 விசாகம் - 1,2,3 போகும் போதும். முக்கியமாக தனுசில் மூலம் -1,2,3,4, பூராடம் -1,2,3,4,  உத்திராடம் -1 போகும் போதும் சரி முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடாது அப்படின்னு நாம சொல்லலாம். காரணம் என்ன பார்த்தீங்கன்னா, மேஷச் சந்திரன் அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து நகர்ந்து போச்சு. பிறக்கும் போது தான் அஸ்வினி நட்சத்திரம் இன்னிக்கி உங்க சந்திரன் எங்க போயிட்டு இருக்கு அப்படின்னு பாத்தீங்கன்னா, ரிஷப ராசியில் போயிட்டு இருக்கு. அப்போ ரிஷபத்தில் இருக்கிற சந்திரனுக்கு கோச்சார சந்திரன் துலாம் வீடான ஆறாம் வீட்டிலோ,  அல்லது தனுசு வீடான எட்டாம் வீட்டிலோ இன்னைக்கு இருக்கிற சந்திரன் போகும் போது நம்ம தவறான டெசிஷன் எடுக்கக் கூடாது. இது தான் சந்திராஷ்டமம் னு சொல்லுவோம். 

இன்னைக்கு இருக்கிற தசா புத்திக்கு,  அந்த சந்திரன் எட்டாம் இடத்தில போகும் போது, நாம தவறான டெசிஷன் எடுக்க கூடாது. அதாவது டெசிஷன் எடுக்கக் கூடாது. முக்கியமான முடிவுகள் எடுக்கக் கூடாது. முக்கியமான முடிவுகள் எடுத்தோம் அப்படின்னு சொன்னா அது தவறாக போகக்கூடிய தன்மை ஏற்படும் என்று சொல்லலாம். 

அதனால இந்த காலகட்டத்துல நாம ARP ன்னு சொல்லப்படுகின்ற இந்த அட்சய ராசி பயணிக்க கூடிய ரிஷப ராசியில் இருந்து, சந்திரன் தனுசு ராசிக்கு வரும் போது , ஒரு தவறான டெசிஷன் எடுக்கக்கூடிய தன்மை இருக்கும் அப்படின்னு சொல்லலாம். 

அதனால இந்த இடத்துல நாம கவனமா இருக்கக் கூடிய விஷயங்களை, நம்ம கொஞ்சம் கவனமாக இருக்கணும். வேற ஒண்ணுமே கிடையாது. கவனமாய் இல்லை அப்படின்னு சொன்னா, அது சம்பந்தப்பட்ட விஷயங்கள் குழப்பமான மனோநிலை ஏற்படுத்தும். நம்ம முயற்சிகள் எல்லாமே விரையமாக கூடிய தன்மையை வந்து ஏற்படும்னு சொல்லலாம். அதனால இந்த காலகட்டத்துல கொஞ்சம் கவனமாய் இருப்பது நல்லது அப்படின்னு நம்ம சொல்லலாம். நன்றி. வணக்கம்.

வீடியோ லிங்க்: 

https://youtu.be/HnpX50lEE98?si=Zky1qz7gJGAPw11O


About author

RADHAKRISHNAN

ALP ASTROLOGER KUNTIKANA RADHAKRISHNA BHAT KERALA



Comments


Leave a Reply

Subscribe here

Scroll to Top