Blog

ALP ஜோதிட முறையில், ஜோதிடரின் ஜாதகம் எப்படி இருக்கும்? தொழில் தொடக்கம் எப்படி இருக்கும்? - ALP ஜோதிட ஆய்வு - by: ALP ஸ்ரீ குரு. Dr. சத்யநாராயணன்.

அனைவருக்கும் வணக்கம். 

இந்த ஜாதகர், கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்திருந்தார். அவர் ஒரு ஜோதிடர். அவருடைய ஜாதகத்தை பார்த்து சொல்லுங்கள், என்றார்.  

அவர், பிறந்த தேதி, பிறந்த நேரம்,  பிறந்த ஊர், எல்லா தகவல்களும் நமக்கு கொடுத்தார். இந்த ஜாதகத்தை பார்க்கும்படியும் சொன்னார். 

என்னிடம் கன்சல்ட் செய்வதற்கு முன், இரண்டு மூன்று ஜோதிடர்களிடம் கேட்டிருக்கிறார். 

இவர் அந்த ஜோதிடர்களிடம் கேட்ட கேள்வி, நான் தொழில் செய்யலாமா, என்பது. 

அந்த ஜோதிடர்கள், நீங்க தாராளமாக தொழில் செய்யலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இவருடைய ஜென்ம லக்னம் கும்பம். கும்பத்திற்கு 2 & 11ஆம் இடத்திற்குரியவர், லாபாதிபதியும் தன காரகனும் குரு தான். குரு பத்தாம் இடத்தில் விருச்சிகத்தில் இருப்பது மிகவும் சாதகமான அமைப்பு; தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நீங்க பண்ணலாம் என அந்த ஜோதிடர்கள் சொல்லியுள்ளார்கள்.  

எல்லாரும் சொல்லி தான் சார் நான் தொழில் பண்ணேன். எனக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டது. அதிலிருந்து நான் எப்படி வெளியில வர்றதுன்னு தெரியவில்லை, என கடைசியாக  என்கிட்ட வந்தார். 

இது கரெக்டான விஷயமா அப்படிங்கிறதுக்காக கேள்வியாக கேட்டார். சொன்ன விஷயங்கள் கரெக்டா அப்படின்னு கேட்டார். 

அதற்கு நான், ஆமா சார் நீங்க சொன்ன விஷயங்கள் எல்லாமே கரெக்ட். ஜென்ம லக்னத்திற்கு 2, 11 ஆம் இடத்துக்குரியவர் தன காரகனும் குரு தான், 11 ஆம் இடத்திற்கு லாபாதிபதியும் குரு தான். அவர் பத்தாம் இடத்தில் இருக்கும் அமைப்பு ரொம்பவும் அருமையான அமைப்பு என்று சொல்லலாம். அவர்கள் சொன்ன விதம் மே பி கரெக்டாக இருந்தாலும் கூட, இப்போ அவருடைய வயதினுடைய லக்னம் எங்க போய் கிட்டு இருக்குன்னு, நாம பாக்கணும். 

அவர் விஷயங்கள் வெளியில் தெரியக் கூடாது என்று நம்மிடம் கேட்டுக் கொண்டதனால், ஒரு சிம்பிள் பாயிண்ட் மட்டும் சொல்கிறேன். 

இப்போ, அவருடைய பிறந்த தேதி,  பிறந்த நேரம், பிறந்த ஊர், வாங்கி நாம போடும் போது, ALP லக்னம் மிதுனம் லக்னம். 

சார் கடன் ஆயிடுச்சா, எனக்  கேட்டோம். 

ஆமாம் என்று சொன்னார். ரீசன் என்ன என்று பாத்தீங்கன்னா, ஏழு பத்தாம் இடத்துக்கு உரியவர் குரு,  நல்ல ஆதிபத்தியம் தான்.  அவர் ஆறாம் இடமான விருச்சிகத்தில் உள்ளார். அப்போ ALP லக்னம், இந்த வயதினுடைய லக்னத்தை வைத்து நீங்க கணக்கு பண்ணி பார்த்தீங்க அப்படின்னு சொன்னா, இந்த மிதுனம் ALP லக்னத்திற்கு பத்தாம் இடத்துக்குரிய குரு ஆறாம் இடத்தில் இருக்கிற அமைப்பு, கடனை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது,  அப்படின்னு சொல்லலாம். இது தான் சார் நடந்தது அப்படின்னு சிம்பிளாக சொன்னோம். 

ஏனென்றால், ஒரே ஒரு ரெஃபரன்ஸ் பாயிண்ட் மட்டும் இருந்தால் போதும். ஏன்னா, நாம பிறக்கிற மாதிரியே இப்ப இருக்கிறது இல்ல. நாம் பிறக்கும் போது நம்மளுடைய வெயிட் மூணு கிலோ. இப்போ நம்முடைய வெயிட் என்ன இருக்கு என  பாக்கணும். பிறக்கும் போது, நம்மளுடைய சிந்தனைகள், எங்க இருக்குன்னு பாக்கணும். 

பிறக்கும் போது, நம்ம சின்ன சின்ன விளையாட்டுக்கு ஆசைப்படுவோம். நம்ம பட்டாசு வெடிக்கணும்னு ஆசைப்படுவோம். இந்த மாதிரி ஆசைகள் இருக்கும். ஆனால் இன்னைக்கு வளர்ந்ததுக்கு பிறகு பாத்தீங்கன்னா நம்ம கார் வாங்கணும், பங்களா வாங்கணும்,  சொத்து வாங்கணும், நல்ல தொழில் பண்ணி பெரிய லெவல்ல வரணும். கௌரவமா இருக்கணும். இந்த மாதிரி தான் ஆசைப்படுவோம். அந்த வயதினுடைய லக்னங்கள் மாறும் போது, சிந்தனைகளும் மாறுபடுகிறது அப்படிங்கிறது தான் அட்சய லக்ன பத்ததியின் உடைய பேசிக்கான கான்செப்ட். 

இப்போ, அவருடைய லக்னம் ALP லக்னம் மிதுனம். ஏழு, பத்தாம் இடத்துக்குரிய குரு ஆறாம் இடமான விருச்சிகத்தில் இருக்கிற அமைப்பு கடனை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது அப்படின்னு நாம சொன்னோம். 

அதனால நீங்க எந்த ஒரு விஷயமாக பார்த்தாலும் சரி, இந்த அட்சய லக்னப் பத்ததி முறையில நீங்கள்  பாத்தீங்க அப்படின்னு சொன்னா, ஒரு தொழில் தொடங்கப் போறீங்க, ஒரு பெரிய டிசிஷன் எடுக்குறீங்க. பெரிய பெரிய டிசிஷன் எடுக்கும் போது, நீங்க பண்ணனும்னு அப்படின்னு பாத்தீங்கன்னா, மிகவும் கவனமாக இருப்பது நல்லது. ஏன் காரணம் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா, நம்ம ஒரு விஷயத்தை பண்றோம் இது நம்மளை மட்டும் பாதிக்காது. நம்மளுடைய ஃபேமிலியும் பாதிக்கும் அப்படிங்கிறது தான் முக்கியமான விஷயம். 

அதனால ஒரு விஷயத்தை எடுத்து வைக்கும் போது, ஒரு அட்சய லக்ன பத்ததி ஜோதிடரை நீங்க மீட் பண்ணி கேட்டீங்க அப்படின்னு சொன்னா,  உங்களுடைய பிரடிக்க்ஷன் உங்களுடைய வாழ்க்கையினுடைய பயணம் கரெக்டா இருக்கும்னு சொல்லலாம். 

ஏன் அப்படின்னு சொன்னா, திருப்பி என்ன வேண்டுமானாலும்  சம்பாதிச்சுடலாம், பணம் கூட  சம்பாதிச்சுடலாம்.  ஆனால் டைம் திரும்பியும் நமக்கு வராது அப்படிங்கிறது தான் முக்கியம். அதனால, இப்போ என்ன ALP லக்னம் உங்களுக்கு  போய் கிட்டு இருக்குன்னு பாருங்க. அதை வைத்து, நீங்க தொழில் பண்ணலாமா,  வேண்டாமா, போலாமா வேண்டாமா, நிறைய பேர் ஃபாரின் போவாங்க திருப்பி ரிட்டன் வருவாங்க. ஃபாரின் போலாமா வேண்டாமா? இந்த விஷயத்தை படிக்கலாமா வேண்டாமா? இந்த விஷயத்தை கரெக்டா தீர்மானம் பண்ணிட்டு, ஒரு விஷயத்தை பண்ணும் போது,  உங்களுடைய வாழ்க்கை அடுத்த லெவலுக்கு போகும், அப்படிங்கிறதுல எந்த விதமான சந்தேகமும் இல்லை. அதனால் டிசிஷன் எடுக்கிறது நீங்க கரெக்டா டிசிஷன் எடுங்க. 

நன்றி. வணக்கம்.

வீடியோ லிங்க்: 

https://youtu.be/wtOgEZE2mIs?si=feB3ySCxidKmxHZK


About author

RADHAKRISHNAN

ALP ASTROLOGER KUNTIKANA RADHAKRISHNA BHAT KERALA




Scroll to Top