Blog

  • நினைத்ததை நடத்தி காட்ட முத்துமாரியம்மன் வழிபாடு பண்ணுங்கள். ஸ்ரீ குரு டாக்டர் உமா வெங்கட். – ALP ஜோதிடர்.

    full video link: https://youtu.be/GfA2OP8M854?si=AKWpkUW53fOADAw3

    வணக்கம். அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் ஸ்ரீ குரு உமாவெங்கட்.        இன்னைக்கு ஒரு நண்பர் கேட்டாங்க முத்துமாரியம்மன் வழிபாடு யார் பண்ணலாம்? அவங்களுக்கு பண்ணுனாங்கன்னா என்ன யோகத்தை கொடுக்கும் அப்படிங்கிற்து.

     முத்து மாரியம்மன் யாரு?

    அப்படிங்கிறத நீங்க தெரிஞ்சுக்கணும். நம்ம வீட்டு தெய்வம் அப்படின்னு சொல்லலாம். தமிழ்நாட்டுல நாட்டுப்புற தெய்வங்கள் என்று சொல்லுவாங்க.

    அதான்நம்ம வீட்ல உள்ள ஊர் தெய்வங்களில் எல்லாம் முத்து மாரியம்மன் ரொம்ப ரொம்ப விசேஷம். இந்த கோடை காலத்தில் ஒரு குழந்தை முகம்  மொத்தமும் ஒரு முத்து வடிவமாக கொண்டு வந்தது அது தெய்வமாக மாறியது அதுதான் முத்து மாரியம்மன்னு சொல்லுவாங்க.

    இந்த வெக்கை காலத்துல அந்த சுவாமிக்கு நீரோட கட்றதுன்னு சொல்லுவாங்க. அது ரொம்ப ரொம்ப விசேஷம். பொதுவாக இந்த வெயில் காலங்கள்ல கோவில்கள்ல கோடை கட்றதுன்னு சொல்லுவாங்க. எனக்கு வந்து உடல் முழுவதும் வெப்பமாக சிலருக்கு அம்மையாகவோ சிலருக்கு வெப்பம் தாங்காமல் இருக்கும். அவங்களுக்கு இந்த முத்து மாரியம்மன் வழிபாடு ரொம்ப ரொம்ப விசேஷம்.

    வெப்பத்தால் ஏற்படும் நோய் :

    இந்த சிக்கன் பாக்ஸ் வரும் இந்த உடல்ல கட்டிகளாக இருக்கும். அதே மாதிரி வெப்பத்தினால் ஏற்படக்கூடிய நோய்களுக்கு முத்துமாரியம்மன் ரொம்ப விசேஷம்.

    கோடை கட்டும் விழா :

    அவங்க கோவிலில் போயிட்டு கோடை கட்டும் விழா என்று சொல்லுவாங்க சாமியோட கோவில்கள்ல நீர் அடைத்து கட்டுவாங்க. ராத்திரி  முழுதும் அந்த சுவாமி வந்து நீர்ல இருப்பாங்களாம். அதில இருக்க இருக்க இவங்க உடம்புல உள்ள அந்த வெக்கையால் ஆன அந்த தழும்புகளும் அந்த கட்டிகளும் உதிரக்கூடிய காலம் எதுன்னு பார்த்தீங்கன்னா இந்த காலம்.

    மன்னிப்பு :

    அதே மாதிரி ஒரு செயல் தவறாக நடந்தாலுமே நான் தெரியாம ஒரு செயல் செய்துவிட்டேன். அதற்கு ஒரு மன்னிப்பு அப்படிங்கிறது இந்த கோடை கட்டும் விழா கண்டிப்பாக இருக்குது. எந்த கோவில்களில் கோடை கட்டும் விழா நடக்கிறதோ அதுவும் குறிப்பாக இந்த மாரியம்மன் கோவிலில் அதிகமாக இருக்கும். அதே மாதிரி வேப்பிலையில  எடுக்குறது. வேப்பிலையை வீட்ல வந்து நம்ம சில குழந்தைகளுக்கு பார்த்தீங்கன்னா அரச்சு கொடுப்பாங்க. அந்த மாதா மாதம் உடல்ல உள்ள கழிவுகளை நீக்குவதற்கும். நம்ம சாப்பிடற பொருட்கள் வந்து நிறைய மக்குத் தன்மை அப்படிங்கிறது இருக்கும். அதை உடலில் இருந்து அகற்றுவதற்கும் வேப்பகொழுந்து வந்து குழந்தைகளுக்கும் பெரியவங்களும் அரைத்து குடிப்பாங்க. இதுவே அவங்களுக்கு நல்லதுன்னு சொல்லலாம். இது மாதிரி இந்த முத்து மாரியம்மன் வழிபாடு ரொம்ப ரொம்ப விசேஷம்.

    வழிபடும் முறை :

    நம்ம ஒரு செயல் செய்கிறோம் அது நடக்கல அப்படின்னா அந்த குழந்தை தாயிடம் அந்த அம்மன்கிட்ட விட்டாலே போதும் அவங்க அதை நடத்தி கொடுப்பாங்க. அவங்களுக்கு வந்து நம்ம மனதார அதாவது நம்ம செய்யக்கூடிய செயல்கள் ரொம்ப இஷ்டப்பட்ட செயல் எனக்கு நான் போதும் சொல்ல கூடிய ஒரே ஒரு இது எனக்கு உணவு மட்டுமே. அந்த சுவாமிக்கு நெய்வேத்தியமாக நீங்க சக்கரை பொங்கலும் தயிர் சாதம் கொடுத்தாலே போதும் வேற எதுவுமே அவங்க கேட்க மாட்டாங்க. அதே மாதிரி பச்சை பட்டு புடவை. பட்டாடைனு சொல்லுவாங்க பச்சை பட்டு புடவை வாங்கி கொடுப்பது ரொம்ப ரொம்ப விசேஷம்.

    கன்னி மற்றும் மீனம் லக்னம் :

    நீங்க நினைத்த காரியத்தை அந்த தேவி வந்து உடனே நிகழ்த்திக் கொடுக்க கூடிய ஒரு தன்மை இந்த முத்துமாரியம்மன் வழிபாடு கண்டிப்பாக நடக்கும். இப்போ ஒருத்தங்களுக்கு அட்சய லக்னம் கன்னியா லக்னமாகவோ மீன லக்னமாகவோ இருக்குதுன்னா இந்த முத்துமாரியம்மன் வழிபாட பண்ண பண்ண இவங்களுக்கு நிறைய மாற்றங்கள் தானாகவே நடக்கும்.

    தனக்கு மட்டும் இல்லாம தன் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் எல்லாமே தீர்ப்பதற்கு இந்த முத்துமாரியம்மன் கண்டிப்பாக கை கொடுப்பாங்கன்னு சொல்லலாம். அதே மாதிரி இந்த குலதெய்வ பிரச்சனை உள்ளவங்களுக்கும் இந்த முத்து மாரியம்மன் வழிபாடு பண்ண பண்ண உங்களுடைய குலதெய்வத்தோட அருள் அப்படிங்கிறதும் குலதெய்வத்தோட தன்மைகள் அப்படிங்கிறதும் சரிவரும்னு சொல்லலாம்.

    தடைகளை நீக்கும் அம்மன் :

    ஏன்னா அங்க தடைகளை நீக்கக்கூடியது. ஏன்னா அந்த முகத்துல உள்ள முத்துக்களை உதிர வைக்கிறது யாருன்னா இந்த அம்மன்தான். அப்போ உங்க வாழ்க்கையில உள்ள அந்த தடைகளை உடைக்கக்கூடியது இந்த முத்து மாரியம்மன்.

    கயிறு கட்டுதல் :

    சிலருக்கு பார்த்தீங்கன்னா குழந்தைகளால பிரச்சனை. நேரா வளர மாட்டேங்குறாங்க. நம்ம சொல்ல சொல்ல கேக்க மாட்டேங்குறாங்க அப்படிங்கிறவங்க அந்த முத்து மாரியம்மன் கோவிலுக்கு போயிட்டு சுவாமி சன்னதிக்கு குழந்தைக்கு கையில கயிறு கட்டுவாங்க. செவந்த சிவப்பு கயிறு அப்படிங்கிறது கையில கட்டுவாங்க. அதை கட்டி அந்த 41 நாள்.  41 நாள் மாத்தி மாத்தி கட்டிட்டு வர அந்த குழந்தைகள் வந்து அந்த தாயின் மடியில எப்படி வளருதோ அதே மாதிரி தன் அம்மாவின் அம்மாவுடைய கண்ட்ரோல்ல அந்த குழந்தைகள் கண்டிப்பாக வளர்ந்து வரும் அப்படிங்கிறது சொல்லலாம்.

    திடீர் மாற்றத்தை தரக்கூடிய  அமைப்பு :

    இந்த முத்துமாரியம்மன் நிறைய பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய ஒரு தீர்வாக இருக்கிறது. திடீர் மாற்றத்தை தரக்கூடியது உங்க வாழ்க்கையில.

    கடக லக்னம் அட்சய லக்னமாக போறவங்களுக்கும் மீன லக்னம் போறவங்களுக்கும் இவங்க ரொம்ப விசேஷம்னு சொல்லலாம்.

    அதே மாதிரி விருச்சிக லக்னம் அட்சய  லக்னமாக போறவங்களுக்கு தந்தையுடன் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள், தந்தையோடு சொத்து பிரச்சனை இருக்கிறவங்க அதே மாதிரி அப்பாவுக்கும் பையனுக்குமே ஆகாதுன்னு சொல்றவங்க இந்த மாரியம்மன் வழிபாடு ரொம்ப ரொம்ப விசேஷம் தொடர்ந்து பண்ணலாம். நம்ம ஊர்ல இருக்கக்கூடிய முத்துமாரியம்மன் கோவில் போயிட்டு நல்லெண்ண தீபம் 12 . நல்லெண்ணெய் தீபம் அப்படிங்கிறது போடுறது ரொம்ப விசேஷம். அதை மாசத்துல ஒரு நாள் கண்டிப்பாக செய்யணும்னு சொல்லலாம். அதே மாதிரி செய்தே ஆக வேண்டும் உங்க பிரச்சனைகளை விரைவாக தீரும்னு சொல்லலாம்.

    மரம் நடுவது :

    அதே மாதிரி இந்த 12 மரம் நடுவது அப்படிங்கிறது நல்லா இருக்கும். நீங்க அப்படி இல்ல அப்படின்னா ஒரு இரண்டு மரம் வேப்ப மரமும் அரச மரமும் சேர்ந்து நடுவது இந்த லக்னக்காரர்களுக்கு ரொம்ப விசேஷம். இந்த முத்துமாரியம்மன் கோவிலில் போயிட்டு இத நட்டு வைக்கிறது ரொம்ப விசேஷம்.

    ரொம்ப ரொம்ப விசேஷம் என்னனு பாத்தீங்கன்னா ரெண்டு வேப்பம் கன்று வாங்கி கோவிலில் நடுவது இல்லன்னா வேப்பங்கன்றும் அரசங்கன்றும் சேர்ந்து அந்த கோவில்ல நட்டுட்டு வருது ரொம்ப விசேஷம். அங்கு நட இடம் இல்ல அப்படின்னா உங்க குலதெய்வ கோவிலையோ இல்ல அப்படின்னா உங்களுடைய குளத்தங்கரை உங்க ஊர்ல இருக்கிற  குளத்தங்கரை ஆத்தங்கரை அந்த மாதிரி ஏதாவது இடங்கள்ல போய் இந்த அரசும் ,வேம்பும் சேர்ந்த மரங்களை நடுவதனால் உங்க வாழ்க்கையில மாற்றம் இருக்குமானால் கண்டிப்பாக மாற்றம் இருக்கும்.

    ஒரு பிறந்தநாளுக்கும் ஒரு மரம் நடுதல் :

    எப்போதுமே பொதுவுடைமூர்த்தி சார் சொல்லக்கூடியது 12 மரம் அப்படிங்கிறது நம்ம வாழ்க்கையில கண்டிப்பாக நடவேண்டும் அப்டிகிறது. உங்க வாழ்க்கையில் இப்போ இருந்தே ஒரு ஒரு வருடத்திற்கு இல்லன்னா ஒரு ஒரு பிறந்தநாளுக்கும் ஒரு மரம் நடுதல் அப்படிங்கிறது ரொம்ப சிறப்பு. அட்லீஸ்ட் 12  மரமாவது நடணும்னு சொல்லுவாங்க. ஒரு ஒரு வருடத்திற்கும் ஒரு மரம் நடுதல் அப்படிங்கிறது சிறப்பாக இருக்கும். அது வளர வளர உங்களுடைய வாழ்க்கையினுடைய தன்மைகள் அப்படிங்கிறது ரொம்ப சிறப்பா இருக்கும். இந்த வேப்ப மரமும் அரச மரமும் நடுவது மட்டுமே இல்லாம நம்ம வாழ்க்கையில நம்ம ஒரு நாளாவது அதாவது 12 மரம் அப்படிங்கிறது நம்ம வாழ்க்கையில  நடனும்னு சொல்லுவாங்க. அது எப்போதுமே நமக்கு பலன் கொடுக்கும். அந்த மரம் நடுவது அது வளர வளர நம்மளுடைய கிரகங்களுடைய தாக்கம் அப்படிங்கிறது குறைந்தும்.

    நமக்கு கொடுக்க வேண்டியது கொடுக்கும். அந்த மரம் வளர வளர அது நம்மளுடைய வளர்ச்சிகள் அப்படிங்கிறது இங்க அதிகமாகவே இருக்கும்னு சொல்லலாம். எப்போதுமே  பொதுவுடை மூர்த்தி சார் சொல்லக்கூடியது நம்ம வாழ்க்கையில 12 மரம் கண்டிப்பாக நடவேண்டும். சோ நண்பர்கள் இன்றிலிருந்து ஆரம்பித்துவிடலாம். உங்க வாழ்க்கையில் நீங்களும் தொடர்ந்து பன்னிரண்டு மரம் ஒன்றாகவும் இல்லன்னா இரண்டு இரண்டு மரமாக சேர்ந்தாகவும் நட்டு வளர்த்து வாருங்கள். நன்றி. மீண்டும் இது போல் ஒரு வீடியோவில் சந்திப்போம்.

    www.alpastrology.org

    ALP ASTROLOGY: +91 9786556156 | +918000115656

    Location: 18, Perungalattur, New Perungalathur, Perungalathur, Old Perungalathur, Tamil Nadu 600063, India